மாதம் முழுவதும் வேலைக்கு சென்று கடினமாக உழைத்து வரக்கூடிய சம்பளத்தை பத்திரமாக வைத்து செலவு செய்ய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் சம்பளம் வந்த உடனே அந்த பணம் எப்படி காலியாகிறது என்று தெரியாது. எவ்வளவு முயற்சி செய்தாலும் பணத்தை சேமிக்கவே முடியாது. அப்படி வீட்டிலும் பர்சிலும் பணம் சுத்தமாக இல்லை என்றால் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக பணம் அதிகரிக்கும்.

பரிகாரம் செய்யும் முறை
பணம் அதிகமாகி விட்டால் நம்முடைய அனைத்து ஆசைகளும் நிறைவேறிவிடும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு புனுகு, ஜவ்வாது இரண்டும் தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் ஜவ்வாது, புனுகு, நெய் அனைத்தையும் எடுத்து மை போன்று தயார் செய்து கொள்ள வேண்டும். அதனை ஆண்கள் அவர்களுடைய பர்ஸில் வைக்கப் போவதாக இருந்தால் ஒரு சிறிய சார்ட் பேப்பரை வட்ட வடிவில் வெட்டி கொள்ள வேண்டும் பெண்களாக இருந்தால் அவர்களுடைய பர்ஸில் வைப்பதற்கு ஏற்றவாறு திலக வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
சார்ட்டில் மை கொண்டு எழுத வேண்டியவை
ஆண்களாக இருந்தால் அந்த சார்ட்டின் ஒரு புறத்தில் ஓம் என்றும் மற்றொருபுறம் ஸ்ரீம் என்றும் எழுத வேண்டும். பெண்களாக இருந்தால் ஒரு பக்கம் ஸ்ரீம் என்றும் மறுபக்கம் ம் என்றும் எழுத வேண்டும் பிறகு தயார் செய்து வைத்துள்ள மை இரு பக்கங்களிலும் தடவி ஒரு கவரில் போட்டு பூஜை செய்து வழிபாடு செய்து முடித்த பிறகு பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : பணம் வீண் விரயம் ஆகாமல் தடுக்க செய்ய வேண்டிய பரிகாரம்!



