ஒவ்வொருவரும் அவருடைய வீட்டை பாதுகாக்க மிகவும் கடினமாக உழைத்து சம்பாதித்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க செலவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் தேவையை தாண்டி ஆடம்பர தேவைக்காக சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அப்படி தேவையில்லாமல் பணம் செலவாகி பணம் வீண் விரயம் ஆவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாலட்சுமி தாயார்

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக விளங்கக்கூடிய அவள் தான் மகாலட்சுமி தேவியார். இந்த உலகத்தில் அனைவருமே ஏதாவது ஒரு தொகையை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தொகை எந்த அளவிற்கு அவர்களுடைய கையில் இருக்கிறது என்பதுதான் விஷயம். இதற்கு முக்கிய காரணம் மகாலட்சுமி தேவியாருடைய அருள் மட்டும் தான். மகாலட்சுமியின் அருள் இருந்தால் ஒருவரால் பலகாரராக கூட மாற முடியும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதால் படம் வீண் விரையம் ஆவதை தடுக்க முடியும் அந்த பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு மஞ்சள் நிற பட்டு துணியை எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் எடுக்க வேண்டும். மேலும் வன்னி மரத்திலிருந்து ஒரு சின்ன குச்சியை இலைகளோடு சேர்த்து எடுக்க வேண்டும். அனைத்தையும் மஞ்சள் நிற துணியில் ஒன்றாக வைத்து மூட்டையாக கட்டிய மகாலட்சுமி தயார் உடைய பாதத்தில் வைத்து இரண்டு நெய் தீபங்களையும் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். நெய்வேதியமாக உங்களால் முடிந்தவற்றை வைக்கலாம் முடியவில்லை என்றால் கற்கண்டையாவது நெய்வேதியம் ஆக வைத்து வழிபட வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நாள்
இந்த பரிகாரத்தை சப்தமி நவமி பௌர்ணமி போன்ற திதிகளில் செய்வது நல்லது. மேலும் இந்த திதிகளோடு சேர்ந்த வெள்ளிக்கிழமை வந்தால் அதிகமான பலனை கொடுக்கும். மேலும் மகாலட்சுமி தேவியாருக்கு அருகில் வைத்துள்ள அந்த முடிச்சை வழிபாடு முடித்த பிறகு வீட்டில் பணம் வைக்கின்ற இடத்தில் வைக்க வேண்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைக்கலாம். பணத்தை வைக்கும் இடத்தில் தான் முட்டையை வைக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அந்த மூட்டையை மாற்ற வேண்டும் பழைய பொருட்களை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். மகாலட்சுமி தாயார்க்கு இந்த பரிகாரத்தையும் முழுமனதோடு செய்பவர்களுக்கு பணம் வீண் விரயமாகாமல் தடுக்க முடியும்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேர சமையல் வகைகள் செய்ய வேண்டிய ஒரு பரிகாரம்!



