சுப காரிய தடை நீங்க செய்ய வேண்டிய வழிபாடு!

வீட்டு சுப காரியம் நடக்கப் போகிறது என்றால் அனைவரும் மணமகிழ்ச்சியுடன் இருப்போம் ஆனால் சுப காரியம் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருமணம்தான் ஆனால் திருமணத்தை தவிர வீட்டில் நடக்கக்கூடிய காது குத்து வளைகாப்பு குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பது குழந்தைகள் நல்ல வேலையில் அமர்வது

By Prem Kumar · 6/9/2024

வீட்டு சுப காரியம் நடக்கப் போகிறது என்றால் அனைவரும் மணமகிழ்ச்சியுடன் இருப்போம் ஆனால் சுப காரியம் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருமணம்தான் ஆனால் திருமணத்தை தவிர வீட்டில் நடக்கக்கூடிய காது குத்து வளைகாப்பு குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பது குழந்தைகள் நல்ல வேலையில் அமர்வது என அனைத்துமே சுபகாரியங்கள் தான். ஒருவருடைய வாழ்க்கை இனி நடக்கக்கூடிய அனைத்து நன்மைகயான விஷயங்களுமே சிவகாரியங்கள் தான் ஒரு சிலர் வீட்டு சுப காரியங்களுக்காக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாலும் அது தடைப்பட்டு கொண்டே இருக்கும். அந்த சுபகாரியத் தடைகளை நீக்கி வீட்டில் சுப காரியங்களை நடக்க வைப்பதற்கு விநாயகப் பெருமானே வழிபாடு செய்வதைப்பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்

காரியத்தடை

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை வழிபட்டு தான் செய்ய வேண்டும். காரிய தடைகளை நீக்கி அதில் வெற்றியை தரக்கூடிய தெய்வம் தான் விநாயகப் பெருமான். யாகங்கள் பூஜைகள் திருமணம் புதுமனை புகுவிழா என அனைத்து நல்ல காரியங்களுக்குமே முதலில் மஞ்சளில் விநாயகரை பிடித்து அவரை வழிபட்ட பிறகுதான் அந்த காரியத்தையே அனைவரும் தொடங்குவோம். இப்படி செய்வதால் அந்த காரியம் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று கூறப்படுகிறது

மஞ்சள் பிள்ளையார்

நாம் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து வழிபாடு செய்வது மிகவும் ஒரு அற்புதமான விஷயம். ஆனால் நம் குடும்பத்தில் உள்ள காரிய தடைகள் நீங்க வியாழக்கிழமை என்று தான் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

குரு பகவான்

குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில் இந்த மஞ்சள் விநாயகரை பிடித்து வைத்து வழிபாடு செய்தால் விநாயகருடைய அருளும் குரு பகவானுடைய அருளும் சேர்ந்து கிடைத்து தடைபட்ட காரியங்கள் சீக்கிரத்திலேயே நடக்கும் ஆனால் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்கும் போது ஒரு சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

இந்த மஞ்சள் பிள்ளையாரை பிடிப்பதற்கு நாம் தனியாக மஞ்சளை வாங்கி பூஜை அறையில் வைத்துக்கொண்டு ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த மஞ்சள் தூளை கொட்டி அதனுடன் பச்சை கற்பூரம் ஜவ்வாது சிறிதளவு பன்னீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து தான் பிள்ளையாராக பிடிக்க வேண்டும்.

பிள்ளையாரை தரையில் தட்டில் வைக்கக் கூடாது அரசை இல்லை வெற்றிலை வாழை இலை மா இலை போன்ற ஏதாவது ஒரு மங்களகரமான இலையின் மீதுதான் வைக்க வேண்டும்.

அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்க வேண்டும் அவருக்கு அருகே ஒரே ஒரு அருகம்புல்லை வைப்பது சிறப்பானது விநாயகர் மந்திரத்தை கூறி உங்களுக்கு என்ன சுப காரியங்கள் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது அதனை மனதார கூறி விநாயகரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்

வியாழக்கிழமை இதனை செய்து முடித்த பிறகு அடுத்த பாரம் புதன் கிழமை இந்த மனுஷனை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து தினமும் நம் நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளலாம்.

யாருக்கு இந்த சுப காரிய தடைகள் இருக்கிறதோ அவர்கள் நெற்றியில் மஞ்சளை வைப்பது மிகவும் சிறப்பானது. மறுபடியும் வியாழக்கிழமை இதை திரும்பவும் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 11 வாரங்கள் இந்த மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டை செய்து வர காரிய தடைகள் நீங்கி சுப காரியங்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் நடைபெறும்.

இதனையும் படியுங்கள் : செல்வ வளம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full