உங்கள் வாழ்க்கையில் நெருக்கடியான நிலையில் இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

உங்களுக்கு ஒரு சில நேரத்தில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். குறிப்பிட்டு அந்த நேரத்தை எதிர்கொள்வதற்கு போராட வேண்டியிருக்குமே என்று மனம் நிலை கொள்ளாமல் இருக்கும். இந்த பிரச்சனை இப்போது தான் வரவேண்டுமா? சில மாதம் கழித்து வரக்கூடாதா? சமாளித்து இருப்பேனே? என்று கையை பிசைந்து

By Prem Kumar · 12/9/2024

உங்களுக்கு ஒரு சில நேரத்தில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். குறிப்பிட்டு அந்த நேரத்தை எதிர்கொள்வதற்கு போராட வேண்டியிருக்குமே என்று மனம் நிலை கொள்ளாமல் இருக்கும். இந்த பிரச்சனை இப்போது தான் வரவேண்டுமா? சில மாதம் கழித்து வரக்கூடாதா? சமாளித்து இருப்பேனே? என்று கையை பிசைந்து நிற்கும் நிலை உருவாகும். அது பண தேவையாக இருக்கலாம். பொருள் தேவையாக இருக்கலாம். அவசரமான நிலைமையில் உதவுவதற்கு யாராவது வர மாட்டார்களோ? யாராவது நமக்காக உதவ மாட்டார்களா? என அனைவரின் மனமும் ஏங்குவது உண்டு. ஆனால் மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மிக எளிமையான பரிகாரங்கள் மூலம் தீர்வு சொல்லும் சாஸ்திர நூல் ஒன்று உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படியும் ஒரு நூல் உள்ளது ‘மகா மந்திர போதினி’ என்கிற நூல் திடீரென்று ஏற்படும் இன்னல்களுக்கு பரிகாரம் கூறுகிறது. அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மகா மந்திர போதினி

பல்வேறு ஆன்மீக நூல்கள் ரகசியமாகவே வைக்கபட்டுள்ளன. அத்தகைய நூல்களில் பலவற்றை பலர் நல்ல காரியங்களுக்காகவும், ஒரு சிலர் தீய விஷயங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது போன்ற நூல்களில் ‘மஹா மந்திர போதிணி’ என்ற ஒரு அற்புதமான ரகசிய நூலும் ஒன்றாகும். இந்நூலில் பல்வேறு தெய்வ உபாசனை முறைகள், மந்திர தந்திர யந்திர பிரயோக சூட்சுமங்கள், தெய்வ இரகசியங்கள், திருமந்திர பாடல், ஆன்மிக ஆராய்ச்சி, பூஜை முறைகள், யாக இரகசியங்கள், நித்திய பூஜை வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் பலன்கள், சித்தர்களின் சித்து விளையாடல்கள், வரலாற்று உண்மைகள், நூல் விளக்கங்கள், சித்தர்களுக்குள் நிகழ்ந்த நிகழ்வுகள் என எண்ணற்ற தகவல்களை உள்ளடக்கிய நூல் தான் மகா மந்திர போதினி ஆகும். இந்த ‘மகா மந்திர போதினி’ என்கிற நூல் திடீரென்று ஏற்படும் இன்னல்களுக்கு பரிகாரம் கூறுகிறது.

நெருக்கடியில் இருந்து மீள செய்ய வேண்டிய பரிகாரம்

பிரச்சனை என்று வந்தால் மனதில் பதற்றமும், பயமும் அனைவருக்கும் வருவது சகஜமான ஒன்று தான். ஆனால் பிரச்சனைகள், நெருக்கடியான சூழ்நிலைகள் வரும் தான் நாம் நிதானத்தை கடைவிடாமல் இருக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லுவார்கள். நாம் யார், நம்முடைய குணம் என்ன என்பதை நமக்கே உணர்த்துவதற்காக தான் நெருக்கடிகள் ஏற்படுவதாக சான்றோர்கள் பலர் சொல்வதுண்டு. அப்படியான ஒரு சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய வகையில் தான் ஒரு பரிகாரத்தை தான் மகா மந்திர போதினி நூல் கூறுகிறது.

இந்த பரிகாரம் செய்ய வெள்ளிக்கிழமை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் சாமி படங்களுக்கு பூ வைத்து, பூஜை செய்து முடித்த பின் 20 மொச்சை கொட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குறையாமல் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் இந்த மொச்சையை ஒரு வெள்ளை துணியில் சேர்த்து லேசாக கட்டிக் கொள்ளுங்கள்.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி!
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ!”

பின் உங்கள் கைகளில் மொச்சை வைத்துள்ள முடிச்சை வைத்துக் கொண்டு கண்களை மூடி இந்த மந்திரத்தை ஆறு முறை தொடர்ந்து உச்சரிக்கவும். பின் இந்த முடிச்சை உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கொண்டு போய் போட்டு விடலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வாரங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளகல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த பரிகாரத்தை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், பகல் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் செய்யலாம். இது மிகவும் எளிய பரிகாரம் தான் ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. இந்த பரிகாரத்தை நீங்கள் மனதார செய்து வர உங்கள் கண் முன்னே இருக்கும் இக்கட்டான பிரச்சனைகள் விரைவில் தீர்வுக்கு வரும்.

இதனையும் படியுங்கள் : கஷ்டங்கள் தொலைந்து போக செய்ய வேண்டிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full