குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளை தீர்க்க செய்ய வேண்டிய வழிபாடு!

நம்முடைய வீட்டில் தான் நமக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்னதான் வீட்டை விட்டு பல இடங்களுக்கு சென்றாலும் இறுதியாக நம் இஷ்டப்படி நம் வீட்டில் தான் வாழ முடியும் ஆனால் வீட்டிற்குள் வந்தாலே ஒரு சிலர் வீட்டு சண்டைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை ப

By Prem Kumar · 6/9/2024

நம்முடைய வீட்டில் தான் நமக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்னதான் வீட்டை விட்டு பல இடங்களுக்கு சென்றாலும் இறுதியாக நம் இஷ்டப்படி நம் வீட்டில் தான் வாழ முடியும் ஆனால் வீட்டிற்குள் வந்தாலே ஒரு சிலர் வீட்டு சண்டைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்குள்ளும் சண்டைகள் வந்து நிம்மதியே இல்லாமல் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை மாற்றி மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

கிருஷ்ண பரமாத்மா

கிருஷ்ணர் பெருமாளுடைய அவதாரங்களில் ஒருவர் அவரை நாம் மனதார கிருஷ்ணா என்று கூப்பிட்டாலே அவர் ஓடோடி வருவார் ஒரு சிறிய பொருளை அவருக்கு முழு மனதுடனும் அன்போடும் கொடுத்தால் அவர் மனமுகர்ந்து அதனை ஏற்றுக்கொண்டு நமக்கு நல்ல வழியை காட்டுவார் என்று கூறப்படுகிறது. எனவே கிருஷ்ணரை நாம் நம்பிக்கையோடும் முழு மனதோடும் வழிபட்டால் நம் வீட்டில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும்

இந்த வழிபாட்டை செய்ய வேண்டிய நேரம்

இந்த குறிப்பிட்ட வழிபாட்டை வியாழக்கிழமை செய்வதுதான் மிகவும் சிறப்பானது இந்த வழிபாட்டை வீட்டில் ஒருபோதும் செய்யக்கூடாது அருகில் உள்ள கிருஷ்ணருடைய ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன்பு ஒரு மஞ்சள் நிற துணியை வாங்கி அதில் 11 துளசி இலைகளை வைத்து மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பழங்களான மாம்பழம் வாழைப்பழம் என ஏதாவது ஒரு பழத்தை அதில் வைக்க வேண்டும்.

பரிகாரத்தை செய்யும் முறை

கோவிலுக்கு சென்று அந்த மஞ்சள் நிற முடிச்சை கிருஷ்ணரின் பாதங்களில் வைத்து கொடுக்க சொல்ல வேண்டும் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக பதினொரு வாரங்கள் இந்த வழிபாட்டை செய்யும்போது கிருஷ்ண பகவானின் பரிபூரண அருளால் நம்முடைய குடும்பமும் மகிழ்ச்சியாகவும் சண்டைகள் இல்லாமலும் இருக்கும். மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள்.

இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full