பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி தேவியார் பரிகாரம்!
அனைவருக்குமே வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பண வரவை அதிகரிப்பதற்காக நாம் செய்யும் உழைப்பும் முயற்சிகளும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கும். அதனை தடுக்க அதிர்ஷ்டம் கிடைக்க மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்தாலே பண
அனைவருக்குமே வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பண வரவை அதிகரிப்பதற்காக நாம் செய்யும் உழைப்பும் முயற்சிகளும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கும். அதனை தடுக்க அதிர்ஷ்டம் கிடைக்க மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்தாலே பணவரவு தடை நீங்கி பணவரவை அதிகரிக்க முடியும். பணத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் மனதார நினைத்து மகாலட்சுமி மந்திரங்களை சொல்வது மகாலட்சுமிக்கு பூஜை நடத்தி அபிஷேகங்கள் செய்வது அவருக்கு பிடித்தமானவற்றை வாங்கி வைத்து வழிபடுவது இவற்றையெல்லாம் செய்யும்போது மகாலட்சுமி தாயார் நமக்கு நல்லதையே கொடுப்பார். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாலட்சுமி தாயாரின் அம்சம் நிறைந்த பொருட்கள்
மகாலட்சுமி தாயார் உடைய அம்சம் நிறைந்த பொருட்களாக நிறைய பொருட்கள் உள்ளது அந்த பொருட்களை எல்லாம் நம் வீட்டில் வைத்திருந்தாலே மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் பரிபூரணமாக குடியேருவார். மகாலட்சுமி தாயாருக்கு பிடித்த வாசனை மிகுந்த பொருட்களில் ஒன்றுதான் ஏலக்காய் இந்த ஏலக்காயை வைத்து நாம் வழிபாடு செய்தால் பணவரவிற்கு தடையே இருக்காது.
ஏலக்காய் பரிகாரம்
அதற்கு முதலில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து கொள்ள வேண்டும். மஞ்சள் நிற துணி இல்லை என்றால் வெள்ளை நிற துணியை எடுத்து மஞ்சள் பன்னீர் கலந்த தண்ணீரில் முக்கி எடுத்து காய வைக்க வேண்டும். ஐந்து இடக்காய்களை எடுத்து மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் மகாலட்சுமி தாயார் உடைய பாதத்தில் அந்த முடிச்சை வைத்து உங்களுடைய பெயர் ராசி நட்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்து மகாலட்சுமி தாயாரை மனதார வழிபட்டு விட்டு வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் அந்த முடிச்சை நீங்கள் பணம் வைத்திருக்க கூடிய இடத்தில் வைக்க வேண்டும்.
பரிகாரத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள்
அந்த முடிச்சை நாம் பழம் வைக்கின்ற இடத்தில் வைப்பதால் வீட்டில் பண வரவு அதிகரித்து அதிர்ஷ்டம் கிடைத்து நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு எதிர்ப்பாராத இடத்திலிருந்து எல்லாம் பணம் நமக்கு கிடைக்கும். அனைவருடைய வீட்டிலுமே இருக்க கூடிய இந்த ஏலக்காயை வைத்து ஒரு எளிமையான பரிகாரத்தை செய்வதால் நமக்கு பல மடங்கு நன்மைகள் கிடைக்கும் வீட்டில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : பணம் செழிக்க வீட்டில் வைக்க வேண்டிய படம்!