வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டிருக்கும் அதே வாஸ்து சாஸ்திரத்தின் படி அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் வைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் உள்ள சுவரும் அப்படித்தான். வீட்டில் நாம் ஒரு சில படங்களை மாற்றி வைக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கையான சில படங்கள் வீட்டில் இருக்கும்போது நமக்கு எப்பொழுதுமே ஒரு நேர்மறை ஆற்றல் கிடைக்கும் தூங்கி எழும்போது ஒரு சில படங்களை பார்க்கும்போது நம் மனதிற்கு இதமாகவும் இருக்கும். அந்த வகையில் வீட்டில் எந்த படத்தை மாட்டி வைத்தால் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் பணம் அதிகரிக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
7 குதிரை படங்கள்

சூரிய பகவானுக்கு உரிய ஏழு குதிரைகள் பூட்டிய படம் தெற்கு திசையில் நம் வீட்டில் சுவற்றில் இருந்தால் வியாபாரம் தொழில் போன்றவை அதிகரிக்கும். வாழ்க்கையில் ஒரு சில இடங்களில் துவண்டு போகும் போது அந்த படம் உங்களை தைரியமாக்கும் புதிய தொழில் தொடங்குபவர்கள் ஏழு குதிரை பூட்டிய அதிர்ஷ்ட பணத்தை தெற்கு திசையில் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மாட்டி வைப்பதால் மனதிற்கு ஒரு நேர்மறை ஆற்றல் கிடைக்கும்
முருகன் வாகனம்
முருகப்பெருமானுடைய மயில் வீட்டில் இருக்கும்போது மயில் தோகையை விரித்து ஆடுவது போல படம் பூஜை அறையில் இருக்கும் போதும் வீட்டில் உள்ள அனைத்து பயங்களையும் போக்கி நல்ல நேர்மறை ஆற்றலை கொடுக்கும் இந்த மயில் படத்தை வீட்டில் வடக்கு திசையில் மாட்டி வைப்பது நல்லது. வடக்கு திசையில் மாட்டி வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் தெற்கு திசையில் மாட்டி வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்.
மலை சார்ந்த படங்கள்
இயற்கை காட்சிகளான மலை மழை போன்ற படங்களை ஒரு சிலர் வீட்டில் வைக்க விரும்புவார்கள் இந்த படங்களை வீட்டில் தென்மேற்கு திசையில் வைப்பது உங்களுடைய எதிரிகளை உங்களுக்கு நண்பர்களாக மாற்றும் வீட்டில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு இயற்கையான படம் என்றால் அது தாமரை நிறைந்த குளம். அந்தப் படத்தை வீட்டில் மாட்டி வைக்கும் போது நீங்கள் ஆசைப்பட்ட ஆடம்பர பொருட்களை வீட்டிற்கு வாங்க முடியும்
நீர்வீழ்ச்சி படம்
வீட்டில் பணம் வீண் விரையம் ஆகாமல் இருப்பதற்கு கஷ்டப்பட்டு உழைக்கக்கூடிய பணம் நம்மிடம் இருப்பதற்கு அருவி நீர்வீழ்ச்சி ஆறு போன்ற படங்களை வீட்டில் வடக்கு எழுத்தில் மாட்டி வைப்பது வீட்டிற்கு நிறைய நேர்மறை ஆற்றலை கொடுத்து பணத்தை ஈர்க்கும்.
குழந்தை படங்கள்
குழந்தைக்காக இயங்குபவர்களும் கர்ப்பமாக உள்ளவர்களும் வீட்டில் குழந்தை படங்களை வாங்கி வைப்பது நேர்மறை எண்ணங்களை கொடுக்கும். கணவன் மனைவி தங்கும் அறையில் பெரியதாக குழந்தை படத்தை மாட்டி வைக்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பிரச்சினைகளையும் குறைக்கும்.
மேற்கூறிய படங்களை உங்கள் வீட்டில் மாட்டி வைத்து அதனால் கிடைக்கும் நன்மைகளை பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : வீட்டின் இந்த திசையில் துளசி செடியை வைத்தால் பண கஷ்டம் விலகுமாம்!





