கடன் பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

அனைவருடைய வாழ்க்கையிலும் பணம் மிக முக்கியமான அங்கமாக திகழ்கிறது பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்துதான் வாழ்க்கையில் நிம்மதியும் இருக்கும் பண வரவு குறைந்து கொண்டே இருந்தால் அதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு நாம் கண்டிப்பாக

By Prem Kumar · 12/2/2026

அனைவருடைய வாழ்க்கையிலும் பணம் மிக முக்கியமான அங்கமாக திகழ்கிறது பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்துதான் வாழ்க்கையில் நிம்மதியும் இருக்கும் பண வரவு குறைந்து கொண்டே இருந்தால் அதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு நாம் கண்டிப்பாக கடன் பிரச்சனையில் போய் சிக்கிக் கொள்வோம். சிறிய தொகையாக இருந்தால் சீக்கிரத்திலேயே கடனை செலுத்தி விடலாம் ஆனால் பெரிய கடன் பிரச்சினைகள் சிக்கினால் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் சிரமமானது எனவே கடன் பிரச்சனை தீர்வதற்கும் பணவரவு அதிகரிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட பரிகாரத்தை செய்யலாம்.

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்

கடன் பிரச்சினை தீர செவ்வாய்க்கிழமை வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை என ஏதாவது ஒரு நாளில் கற்றாழை மற்றும் கல் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதில் ஒன்றாக திகழக் கூடியதுதான் கல் உப்பு, கற்றாழையில் அதிக அளவு நேர்மறை ஆற்றல்கள் உள்ளது எனவே இவை இரண்டையும் பயன்படுத்தி நாம் செய்யப்போகும் இந்த பரிகாரம் நேர்மறை ஆற்றலை கொடுக்கும். முதலில் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பை இடது கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு கற்றாழை ஜூலை அந்த உப்பின் மீது வைத்து இப்பொழுது கையை அழுத்தமாக மூடிக்கொண்டு உங்களுடைய தலையை இடமிருந்து வளமாக மூன்று முறை சுற்றுங்கள். பிறகு அதை அப்படியே ஒரு சுத்தமான தண்ணீரில் சேர்த்து கரைத்து விடவும் இப்படி செய்தால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைவதை உணர முடியும் கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டே இந்த பரிகாரத்தையும் செய்து வந்தால் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

பணவரவை அதிகரிக்கும் பரிகாரம்

வேலை தொழில் மூலமாக உங்களுக்கு பணவரவு அதிகரிக்க இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்க்கலாம் அதற்கு நமக்கு தேவைப்படுவது கல்கண்டு மட்டும்தான். ஒரு வெள்ளை நிற துணியில் ஒரு டைமண்ட் கற்கண்டை வைத்து முடிச்சாக கட்டி அந்த முடிச்சையும் மகாலட்சுமி தாயார் உடைய பாதத்தில் வைத்து மேற்கொள்கின்ற அனைத்தும் முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் எந்த தடைகளும் வரக்கூடாது என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த முடிச்சை உங்களுடைய பாக்கெட் அல்லது பர்ஸில் வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் வீட்டிற்கு திரும்பியவுடன் அந்தக் கற்கண்டை எடுத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

மேற்கண்ட இரண்டு பரிகாரங்களையும் முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள் கடன் பிரச்சினைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : பணம் கையில் தாராளமாக புரலும் கையில் வெறும் வால் மிளகு இருந்தால் மட்டும் பொதும்!

Recipes AMP · Quick view
View full