வரவேண்டிய பணம் கையில் வந்து சேர்வதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!

அனைவரும் வாழ்க்கையில் நேருவதற்கு பல வழிகளில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் அந்த முயற்சிக்கு முழுமையான பலன்கள் கிடைத்தாலும் கூட அதற்கு ஏற்ற பண பற்றாக்குறையும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் நோக்கமாக கொடுத்த பணம்

By Prem Kumar · 27/8/2024

அனைவரும் வாழ்க்கையில் நேருவதற்கு பல வழிகளில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் அந்த முயற்சிக்கு முழுமையான பலன்கள் கிடைத்தாலும் கூட அதற்கு ஏற்ற பண பற்றாக்குறையும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் நோக்கமாக கொடுத்த பணம் திரும்ப வராமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள் தொழிலில் ஏற்பட்ட லாபத்தை அனுபவிக்க முடியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்படும் இந்த அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்வதற்கு திருப்பதி ஏழுமலையானை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பண வரவு

வாழ்க்கையில் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்குவதற்கு பரிகாரங்களையும் வழிபாடுகளையும் நாம் செய்திருப்போம் என்னதான் பரிகாரங்கள் செய்தாலும் நமக்கு வர வேண்டிய பணம் யாரிடமாவது சிக்கிக் கொண்டாய் அதனை எவ்வளவு முயற்சி செய்தும் உங்களால் பெற முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறீர்களா? அப்பொழுது பணவரவிற்காக இந்த பரிகாரத்தை நாம் செய்யும்போது அதற்கான பலன் வெகு சீக்கிரத்திலேயே கிடைக்கும்.

பரிகாரத்திற்காக வாங்க வேண்டிய பொருட்கள்

இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை சனிக்கிழமை அல்லது புதன்கிழமை அன்று செய்யலாம் இதற்கு நமக்கு ஒரு தங்க நாணயம் வேண்டும் மஞ்சள் துணி ஏதாவது ஒன்றை வாங்க வேண்டும் மஞ்சள் நிற ஜாக்கெட் அல்லது மஞ்சள் நிற துண்டு ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளலாம் மஞ்சள் நிற துணியை மட்டுமே வாங்க வேண்டும். அதனை வெட்டாமல் முழு துணியை அப்படியே பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

அந்த மஞ்சள் நிற துணியில் தங்க நாணயத்தை வைத்து முடிந்து வைக்க வேண்டும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி நாணயத்தை அந்த மஞ்சள் துணியில் வைத்து முடிந்து திருப்பதி ஏழுமலையானை நினைத்து எனக்கு வருவேண்டிய பணம் சீக்கிரத்தில் எனக்கு வந்துவிட்டால் இந்த நாணயத்தை உனக்கு காணிக்கையாக செலுத்துவேன் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு அந்த மஞ்சள் நிற முடிச்சை பெருமாளுடைய பாதத்தில் வைத்து விட வேண்டும்.

வரவேண்டிய பணம் வரும்

உங்களுக்கு வரவேண்டிய பணம் சீக்கிரமாக வந்து விட்டால் உடனே அந்த தங்கள் ஆணையத்தை எடுத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று ஏழுமலையனையும் அலமேலு மங்கையையும் தரிசனம் செய்துவிட்டு திருப்பதி ஏழுமலையான் உடைய உண்டிகளில் அந்த தங்க நாணயத்தை சேர்த்து விட வேண்டும். யாருக்கு இந்த பணம் வர வேண்டுமோ அவர்கள்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் செய்யக்கூடாது முழு நம்பிக்கையோடு ஏழுமலையான் நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக அவருடைய அருளால் உங்களுக்கு வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்கள்! பணம் வீடு தேடி வரும்!

Recipes AMP · Quick view
View full