சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான பசலைக்கீரை கடையல் இப்படி செய்து கொடுங்கள்!
நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை. ஆம், இந்த பசலைக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும்,
நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை. ஆம், இந்த பசலைக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக்கீரை இருக்கிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். பசலைக்கீரையை சாப்பிட்டாலே பாதி நோய்கள் பறந்து போய்விடுமாம். அந்த அளவுக்கு ஆரோக்கியமானது, சத்தானது, மலிவானது. அன்றாட சமையலில் தவிர்க்க முடியாதது..!! உடல் எடை குறைப்பவர்களுக்கு அருமருந்து இந்த கீரை.
இதிலுள்ள உள்ள கரோட்டினாய்டு கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. இதனை உணவில் சேர்க்கும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக நோயின்றி இருக்கும். உங்களுக்கு கீரையைக் கொண்டு வதக்கியோ அல்லது பொரியல், கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தால், அந்த கீரையைக் கொண்டு சுவையான கடையல் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதுவும் பசலைக்கீரை கொண்டு கடையல் செய்தால் சூப்பராக இருக்கும். இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கியுள்ள பசலைக்கீரையில் எப்படி கடையல் செய்யலாம் என்பது பற்றி இங்கு பாப்போம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு பசலைக்கீரை தோசையை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சாப்பிட அருமையாக இருக்கும்!!