சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட வேர்க்கடலை தக்காளி துவையல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். அதை தவிர்த்து சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல் எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த வேர்க்கடலை தக்காளி துவையல் செய்வத
பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். அதை தவிர்த்து சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல் எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த வேர்க்கடலை தக்காளி துவையல் செய்வது மிகவும் சுலபம். அதோடு இந்த துவையலை வெள்ளை சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். பலரும் வேர்க்கடலை சட்னி, குழம்பு கேள்விப்பட்டீருப்பீர்கள். ஆனால் வேர்க்கடலையில் செய்யும் வேர்க்கடலை தக்காளி துவையல் தெரியுமா? இது மிகவும் எளிமையான ரெசிபி தான்.
ஆனால் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். வேர்க்கடலை பாதாம் அளவுக்கு சத்துக்கள் நிறைந்தது. இதனால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன. வேர்க்கடலையில் புரதம், நார்ச்சத்து மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது எடை மேலாண்மை, நீரிழிவு கட்டுப்பாடு, வீக்கத்தைக் குறைத்தல், புற்றுநோயைத் தடுத்தல், வலுவான எலும்புகளை உருவாக்குதல் மற்றும் சருமத்திற்கு பளபளப்பை அளித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதன் விலையும் மலிவானது. அதனால் ஒரு முறை வேர்க்கடலை வாங்கி இந்த துவையல் செய்து பாருங்கள்.
ஒருமுறை உங்கள் வீட்டில் வேர்க்கடலையில் துவையல் செய்து எல்லோருக்கும் பரிமாறினால் மீண்டும் அந்த துவையல் வேண்டும் என எல்லோரும் கேட்கத் தொடங்கி விடுவார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த துவையலை எல்லா விதமான சாப்பாடுடனும் சாப்பிடலாம். இட்லி, தோசை அல்லது தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம். இந்த துவையலில் சிறுது நல்லெண்ணெய் சேர்த்து சுட சுட சாதத்துடன் அப்பளம் வைத்து சாப்பிட்டால், இதன் சுவைத் தனி அலாதி. அப்படிப்பட்ட இந்த வேர்க்கடலை தக்காளி துவையலை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த வேர்க்கடலை கறி ஒரு தடவை செஞ்சு பாருங்க!