- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- dinner
எப்பவுமே நம்ம வீட்ல சப்பாத்தி பூரி போட்டா அதுக்கு உருளைக்கிழங்கு கிரேவி முட்டை கிரேவி தான் வைப்போம். ஆனால் ஒரு தடவை இந்த சூப்பரான வேர்கடலை கறி வச்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். குழந்தைகளுக்கு வேர்க்கடலை சாப்பிட கொடுக்கிறது ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது ஆனா ஒரு சில குழந்தைகள் வேர்கடலையை சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான வேர்கடலை கறி செஞ்சு கொடுங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க ருசியாவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த வேர்க்கடலை கறி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான்.
நம்ம வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது எப்பவாவது நீங்க வேர்க்கடலை வாங்குனா எப்பவுமே அத அவிச்சு சாப்பிடாம ஒரு தடவை இந்த மாதிரி சூப்பரான வேர்கடலை கறி வச்சி பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். இந்த வேர்க்கடலை கறிய சப்பாத்தி பூரிக்கு மட்டும் இல்லாம இட்லி, தோசை, சாதம் புலாவ் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். அவ்ளோ ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுக்கலாம் உங்க குழந்தைகளோட லன்ச் பாக்ஸ்க்கு சப்பாத்தி பூரி செஞ்சு அதுக்கு சைடுஷா இந்த வேர்க்கடலை கறியை கொடுக்கலாம்.
இந்த வேர்க்கடலை கறி ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பராவே இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. உங்க வீட்ல இருக்கிற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வேர்க்கடலையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு. இரும்பு சத்துக்களும் இருக்கு அதனால உடம்புல ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறவங்க வேர்க்கடலையை தினமும் கூட சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான வேர்கடலை கறி எப்படி சூப்பரா செய்வது என்று பார்த்துடலாம்.
இதனையும் படியுங்கள் : சிவப்பு கீரை வேர்க்கடலை பிரட்டல் இப்படி செய்து பாருங்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!
Ingredients
Method
ஒரு குக்கர் வேர்க்கடலையை சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் வேக வைத்த வேர்க்கடலை மல்லித்தூள் கரம் மசாலா உப்பு அனைத்தையும் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான வேர்கடலை கறி தயார்.






