நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது அவசியம். கீரையில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆகவே இந்த பதிவில் சிவப்பு கீரை பிரட்டல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் சிவப்பு கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் கீரையில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன.
உதாரணமாக, கீரை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகமாகும். மேலும், நமக்கு ஏராளமான மருத்துவப் பலன்களை வழங்கி வரும். இந்த சிவப்பு கீரையை கூட்டு செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல வேர்க்கடலை சேர்த்து பிரட்டல் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சிவப்பு கீரை வேர்க்கடலை பிரட்டல் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
சிவப்பு கீரை வேர்க்கடலை பிரட்டல் | Sigappu Keerai Verkadalai Piratal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கட்டு சிவப்பு கீரை
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 டீஸ்பூன் அரிசி
- 1/4 கப் வேர்க்கடலை
- 4 பல் பூண்டு
- 4 வர மிளகாய்
- 1 துண்டு தேங்காய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் உளுந்தும் பருப்பு
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் சிகப்பு கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அரிசி, வேர்க்கடலை, பூண்டு, தேங்காய், மிளகாயை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் கீரையை சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கீரை வேக சிறிதளவு தண்ணீர் தெளித்து கீரை வதங்கினதும், நாம் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து வேகவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, சுலபமான மற்றும் ஆரோக்கியமான முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல் தயார். இந்த கீரை பிரட்டல் அனைத்து வகையான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சத்தான சிறுதானிய முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!