Home சைவம் காலை உணவுக்கு கம்பு வெந்தயக்கீரை ரொட்டி இப்படி செஞ்சி பாருங்கள்!

காலை உணவுக்கு கம்பு வெந்தயக்கீரை ரொட்டி இப்படி செஞ்சி பாருங்கள்!

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி என்பது கம்பு மற்றும் வெந்தய இலைகளால் செய்யப்பட்ட ஆரோக்கியமான சுவையான முழு ரொட்டி ஆகும். இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி சுவை மற்றும் ஊட்டச்சத்துடன் நிரம்பியுள்ளது. அதோடு அவை சாதாரண பராத்தாவிற்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும். இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி செய்முறையை சில நிமிடங்களில் செய்து விடலாம் . கம்பு வெந்தயக்கீரை ரொட்டி, தயிர், ஊறுகாய் மற்றும் கறிகளுடன் பரிமாறவும்!

-விளம்பரம்-

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான  கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.  

ஆரோக்கியம் தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.

Print
No ratings yet

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி | Pearl Millet Methi Roti In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியைமிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும்இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படிஒரு சூப்பரான  கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தான்இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.   ஆரோக்கியம்தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள்நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில்போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Pearl Miller Methi Roti
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கம்பு மாவு
  • 1/2 கப் வெந்தயக் கீரை
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் ஓமம்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 கப் தயிர்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • வெண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  •  கம்புமாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
  • தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு,சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவேண்டும்.
  • உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவேண்டும்.
  • மேலே வெண்ணெய் தடவி பரிமாறவேண்டும்
  • பரிமாற சுவையான கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தயார்!

Nutrition

Serving: 2nos | Calories: 60kcal | Carbohydrates: 14g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 2g | Sugar: 4.5g | Calcium: 38mg