கோடான கோடி கடனை அடைக்க கூடிய பெருமாள் மந்திரம்!!
கோடிக்கணக்கான கடனையும் அடைக்க வேண்டும் என்று தினமும் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குறிப்பிட்ட மந்திரத்தை கூறுவதால் நிச்சயமாக கடனை அடைத்த நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். பல பரிகாரத்தை செய்திருந்தாலும் இந்த ஒரு மந்திரம் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த ஒரு மந்திரத்தை தினமும்
கோடிக்கணக்கான கடனையும் அடைக்க வேண்டும் என்று தினமும் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குறிப்பிட்ட மந்திரத்தை கூறுவதால் நிச்சயமாக கடனை அடைத்த நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். பல பரிகாரத்தை செய்திருந்தாலும் இந்த ஒரு மந்திரம் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த ஒரு மந்திரத்தை தினமும் காலையில் முறைப்படி சொன்னால் போதும் பெருமாள் உங்களுக்கு செல்வங்களையும் வாரி கொடுப்பார் கடன் சுமையும் முற்றிலுமாக தீர்ந்துவிடும். படிப்படியாக பிரச்சனைகள் குறைந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ இந்த மந்திரத்தை எப்படி சொல்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெருமாள் பூஜை
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி பெருமாளுக்கு இரண்டு கல்கண்டு வைத்து நெய்வேதியமாக படைத்து, பிறகு இந்த மந்திரத்தை சொல்வது மிகவும் சிறப்பானது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாள் முன்பு இந்த மந்திரத்தை கூறுவதால் இரட்டிப்பு மடங்கு பலன்கள் கிடைக்கும். மேலும் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் மாட்டுத் தொழுவம் உள்ளது என்றால் அங்கு சென்று அமர்ந்தும் கூட இந்த மந்திரத்தை சொல்லலாம். பசுமாட்டிற்கு பின்புறம் கை வைத்து இந்த மந்திரத்தை சொல்வது சிறப்பானது. பயமில்லாதவர்கள் அதனை பின்பற்றலாம்.
கடன் தீர்க்கும் மந்திரம்
“ஓம் யசஷ்ராஜாய நமஹ”
48 நாட்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை பெருமாள் முன் அமர்ந்து அல்லது பசு மாட்டு தொழுவத்திலோ அமர்ந்து கூறினால் நிச்சயமாக கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கு இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். கடனை அடைப்பதற்கான அனைத்து வழிகளையும் பெருமாள் காண்பித்துக் கொடுப்பார். குருவாயூரப்பன் புகைப்படம் இருந்தால் கூட அவர் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி கல்கண்டு நெய்வேதியம் வைத்து மந்திரத்தை சொல்லி தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இன்னல்கள் என்னவாக இருந்தாலும் அது நிச்சயமாக நீங்கிவிடும். மகிழ்ச்சியு உங்கள் வீட்டில் நிறைந்து காணப்படும்.
இதனையும் படியுங்கள் : கடன் சுமையை குறைக்கும் நவதானிய பரிகாரம்!