பெருமாளின் தீர்த்தத்தின் மகிமை!

பெருமாளுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். மேலும் இந்த மாதத்தில் நாம் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நமக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். செல்வ செழிப்பில் குபேரராக மாற வேண்டும் என்றால் புரட்டாசி முழுவதும்

By Prem Kumar · 9/10/2024

பெருமாளுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். மேலும் இந்த மாதத்தில் நாம் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நமக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். செல்வ செழிப்பில் குபேரராக மாற வேண்டும் என்றால் புரட்டாசி முழுவதும் ஒரு தீர்த்தத்தை நாம் பருக வேண்டும். அறிவியல் ரீதியாக ஆன்மீக ரீதியாக புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட்டால் அது பாவம் என்று கருதப்படுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

புரட்டாசி மாத தானம்

இந்த புண்ணிய மாதமான புரட்டாசி மாதத்தில் வாழ்க்கை சிறப்பதற்கும் ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கும் உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு ஏதாவது தானம் செய்யலாம் மேலும் நிறைய மரக்கன்றுகளை நட்டு வைத்து புண்ணியத்தை தேடலாம். மேலும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அமர்ந்து கடன் சுமை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இப்படி செய்தால் நிச்சயமாக புரட்டாசி மாதத்தில் ஏற்படக்கூடிய கடன் பிரச்சினைகள் தீரும்.

பெருமாள் தீர்த்தத்தின் மகிமை

புரட்டாசி மாதத்தில் பெருமாளுடைய பிரசாதமான தீர்த்தத்தை பருகுவது மிகவும் அதனை பருகுவதால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தால் அது படிப்படியாக குறையும். பெருமாளுடைய தீர்த்தம் வரப்பிரசாதம் போன்றது. மேலும் அந்த தீர்த்தத்தை குடிப்பதன் மூலம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

பெருமாள் தீர்த்தம்

இந்த பெருமாள் தீர்த்தத்தை கோவிலில் போய் தினமும் குடிக்க முடியாதவர்கள் வீட்டிலேயே செய்து குடிக்கலாம் வீட்டிலேயே பெருமாளுக்கு பூக்களால் அலங்கரித்து ஒரு நாள் பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த தீர்த்தத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டில் உள்ள நிறைகுட தண்ணீரில் ஒரு டம்ளர் எடுத்து அதில் அந்த திருத்தத்தை சேர்த்து அதனுடன் இரண்டு துளசி இலைகளை சேர்த்து அந்த தீர்த்தத்தை நீங்களும் பருகி வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம். இந்த துளசி தீர்த்தத்தில் நிறைய நன்மைகள் உள்ளது. இதனை குடிக்கும் போது கோவிந்தா நாராயண பெருமாளே என்ற மந்திரத்தை உங்களுக்கு எவ்வளவு முறை சொல்ல வேண்டுமோ அவ்வளவு முறை சொல்லலாம். மேலும் உங்களுடைய கடன் சுமைகள் குறைந்து ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : வேண்டுதல்களை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு!

Recipes AMP · Quick view
View full