வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு நாம் தெய்வத்தை தான் சரணடைவோம். தெய்வத்திடம் சென்று எனக்கு பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டுதல் வைக்கிறோம் இப்படி நாம் வேண்டுதல் வைத்தாலும் கூட ஒரு சில வேண்டுதல்கள் நிறைவேறுவது கிடையாது.

அதற்கு நாம் முழு மனதோடு உண்மையான பக்தியோடு தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து வேண்டுதலை கேட்க வேண்டும். அப்படி நாம் கடவுளிடம் வைக்கக்கூடிய வேண்டுதல் நிறைவேறுவதற்கு பெருமாளை வழிபட்டால் கிடைக்கும். அதற்கு பெருமாளை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெருமாள் வழிபாடு
இந்த உலகத்தில் நாம் நன்றாக வாழ வேண்டும் என்றால் பெருமாளை நன்றாக வாய்பாடு செய்ய வேண்டும் ஏனென்றால் காக்கும் தெய்வம் பெருமாள் நம்முடைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து அதிலிருந்து நம்மை காத்து நாம் நலமோடு வாழ்வதற்கு தேவையான அனைத்து செல்வத்தையும் நமக்கு பெருமாள் அளிப்பார். அப்படிப்பட்ட பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை வைக்கும் போது அது நியாயமான வேண்டுதலாக இருந்தால் அது சீக்கிரத்திலேயே நிறைவேறும்.
பெருமாளை வழிபாடு செய்ய வேண்டிய முறை
இந்த குறிப்பிட்ட பெருமாள் வழிபாட்டை சனிக்கிழமை அல்லது புதன்கிழமை தான் செய்ய வேண்டும் அன்றைய தினத்தில் பெருமாளை நினைத்து முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். முழுவதுமாக உண்ணாமலும் இருக்கலாம் இல்லையென்றால் காலையில் பால் பழம் சாப்பிட்டு விட்டு மதிய நேரத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்காத சமையலை இலையில் போட்டு சாப்பிடலாம் இரவு ஏதாவது பழங்களை சாப்பிடலாம். தொடர்ச்சியாக இந்த விரதத்தை ஒன்பது வாரம் கடைப்பிடிக்க வேண்டும்.
மாவிளக்கு
இதோடு சேர்த்து நாம் மாவிளக்கு தீபமும் ஏற்ற வேண்டும் வீட்டில் பச்சரிசி மாவு தயார் செய்து அதனுடன் வெல்லம் கலந்து மாவிளக்கு தயார் செய்து ஒரு சுத்தமான இடத்தில் மஞ்சள் தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவால் கோலம் போட்டு அதற்கு மேல் ஒரு வாழை இலை வைத்து இரண்டு மாவிளக்குகளை வைக்க வேண்டும். அதற்கு முன் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். மாவிளக்கில் குங்குமபொட்டு வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். கற்பூரம் இயற்றி வழிபடும் போது அது பச்சை கற்பூரமாக இருந்தால் மிகவும் சிறப்பானது பச்சை கற்பூரத்தை ஏற்றி வைத்த நம்முடைய வேண்டுதல்களை பெருமாளிடம் கூறலாம் ஒன்பது வாரம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வர நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
இதனையும் படியுங்கள் : வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள்





