நாவில் கரைய கூடிய ஜம் ஜம் அன்னாசி ஜாம் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!!!
ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அன்னாசிப்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் அன்னாசி. அன்னாசியை பழம் என்று சொல்வதைவிட அது ஒரு மஞ்சரிகளின் கூட்டு என்று தான
ஜாம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அன்னாசிப்பழ ஜாம் என்றால் தனி ருசி தான். பழத்தை பார்ப்பதற்கு முன்பே அதன் வாசனை நாம் கிரங்கடிக்கச் செய்யும் ஒரு வகை பழம் தான் அன்னாசி. அன்னாசியை பழம் என்று சொல்வதைவிட அது ஒரு மஞ்சரிகளின் கூட்டு என்று தான் கூற வேண்டும். அதாவது அன்னாசி ஒரு மலர் மஞ்சரி. இப்படிப்பட்ட அண்ணாசியில் நிறைய சத்துக்கள் உள்ளன.
பிரேசிலை தாயகமாகக் கொண்ட அன்னாசி பழத்திற்கு ஜூன் 27 அன்னாசிப்பழ தினமாகவே கொண்டாடப்படுகிறது. அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள். இதை உண்டால் தொப்பை குறையும். கொழுப்பு குறையும்.இதில் உள்ள விட்டமின் சி சத்துக்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றது. இதில் உள்ள மாங்கனீஷ் கால்சியம் எலும்பிற்கு வலிமை சேர்கிறது.
நாம் அன்னாசி பழத்தில் ரசம் , கேசரி , ஜூஸ் கேக் போன்றவற்றை அன்னாசிப்பஜ எஸன்ஸ்ஸில் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது அன்னாசிப்பழத்தில் ஜம்முன்னு ஜாம் செஞ்சு சாப்பிட போறோம். இந்த அன்னாசிப்பழம் நாக்குல வச்ச உடனே கரைஞ்சு போயிடும். இந் ஜாமை பிரட், சப்பாத்தி தோசை ஏன் சும்மாவே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து அன்னாசிப்பழ ஜாம டேஸ்ட் பண்ணிட்டே இருக்கலாம் . அந்த அளவுக்கு ருசியான சுவையான நல்ல மனம் மிக்க அன்னாசி பழ ஜாம்.எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.