எப்பொழுதும் ஒரே ரசமா ? இப்படி கமகமனு அண்ணாச்சி பழ ரசம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

ரசம் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்திய உணவு வகை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் தினசரி செய்யக்கூடிய உணவு. சாதம் ரசம் சாம்பார், பொறியல் என அனைத்தும் வித விதமாக இருந்தால் தான் நம்மால் சுவையாக சாப்பிட முடியும் அல்லவா..? அதிலும் குறிப்பாக ரசம் இல்லாமல் உணவை

By ·

ரசம் மிகவும் புகழ்பெற்ற தென்னிந்திய உணவு வகை. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் தினசரி செய்யக்கூடிய உணவு. சாதம் ரசம் சாம்பார், பொறியல் என அனைத்தும் வித விதமாக இருந்தால் தான்  நம்மால் சுவையாக சாப்பிட முடியும் அல்லவா..?

அதிலும் குறிப்பாக ரசம் இல்லாமல் உணவை எடுத்துக்கொண்டால், செரிமானம் சரி இல்லாமல் அவதிக்குள்ளாக நேரிடும். ரசத்தில் உள்ள மசாலாக்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ரசத்தில் புதினா ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம், நண்டு ரசம் என்று பல விதமான ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இது நாள் வரை புளி ரசம் மட்டுமே அதிகமாக  பயன்படுத்தி வந்த நம்மவர்களுக்கு  இனி  அன்னாசி பழ ரசம் ரெடி.

நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அன்னாசிப் பழத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை அள்ளித் தரும் அன்னாசிப் பழத்தைக் கொண்டு, சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான ரசத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை