ஆரோக்கியமான பிரண்டை பொடி இப்படி ஒரு முறை செய்து வைத்துக் கொள்ளுங்கள்!!
இட்லி பொடி, கொள்ளு பொடி, பருப்பு பொடி, அப்படின்னு எக்கச்சக்கமான பொடி வகைகள் செஞ்சிருப்பீங்க. இந்த பொடி வகைகள் எல்லாமே சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆனா எப்பவுமே இந்த மாதிரி ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா பிரண்டை வைத்து ஒரு சூப்பரான பிரண்டை பொடி செஞ்
இட்லி பொடி, கொள்ளு பொடி, பருப்பு பொடி, அப்படின்னு எக்கச்சக்கமான பொடி வகைகள் செஞ்சிருப்பீங்க. இந்த பொடி வகைகள் எல்லாமே சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். ஆனா எப்பவுமே இந்த மாதிரி ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா பிரண்டை வைத்து ஒரு சூப்பரான பிரண்டை பொடி செஞ்சு பாருங்க. இந்த பிரண்டை பொடி இட்லி, தோசை ரெண்டுக்கும் சூப்பரா இருக்கும் கொஞ்சமாக நல்லெண்ணெய் இல்லனா நெய் ஊத்தி சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். பொதுவாக எலும்புகள் சந்திக்கக் கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கி விடும்.
இதன் காரணமாக ஏற்படும் முதுகுவலி, கழுத்து வலி காரணமாக தலையை அசைக்க முடியாமலும் அவதிப்பட நேரிடலாம். இந்தப் பாதிப்பில் இருந்து இருந்து விடுபட வேண்டுமானால் பிரண்டையைக் கொண்டு பொடி செய்யுங்கள். இந்த பிரண்டை பொடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான பிரண்டை பொடி ஒரே நாளில் சுலபமாக செய்திடலாம். இந்த பொடி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். ஒரு மாதத்திற்கு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்து சாப்பிடலாம்.
வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் வீட்டில் இந்த பொடியை ரெடி பண்ணி எடுத்துட்டு போனால் ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். இதில் நாம் கருப்பு எள் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையில் ரொம்ப அற்புதமாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் அப்புறம் அடிக்கடி இந்த பிரண்டை பொடியை செய்து வைத்துக் கொள்வீர்கள். பிரண்டை சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பிரண்டை பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பிரண்டை கடையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது!!!