ருசியான பிரண்டை கடையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது!!!

- Advertisement -

மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் கடையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. பிரண்டைத் கடையல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் வரக்கூடிய குறிப்புகளை பின்பற்றி இந்த பிரண்டைத் கடையலை பக்குவமாக செய்தால் ருசியும் அருமையாக இருக்கும்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

-விளம்பரம்-

ஒவ்வொருவரும்  உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், உணவினை சாப்பிடும் அளவிற்கு பலருக்கும் விழிப்புணர்வு வந்துள்ளது. எந்த இணைவு சாப்பிட்டால் உடல் நலம் சீர் படும் என்பதை பற்றியெல்லாம் யோசிடது உண்கின்றனர். காலை அவசர அவசரமாக வேலைக்கு சென்று மதியம் எதையாவது சாப்பிட்டபின், மறுபடியும் வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு உறங்கும் வழக்கத்தைக் மாற்றி கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இடைப்பட்ட நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் கடைகளுக்கு சென்று ஜங்க் ஃபுட் சாப்பிடுவதும் பலரது வழக்கமாகும்.  ஆனால் முடிந்தவரை வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள். அவ்வாறு சூடான சாதம், இட்லி தோசைக்கு எப்போதும் செய்யும் குழம்பு கூட்டிற்கு பதில் தவிர்த்து இந்தப் பெரண்டை கடை சாப்பிட்டுப் பழகுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
4 from 2 votes

பிரண்டை கடைசல் | Pirandai Kadaiyal Recipe In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்,உணவினை சாப்பிடும் அளவிற்கு பலருக்கும் விழிப்புணர்வு வந்துள்ளது. எந்த இணைவு சாப்பிட்டால் உடல் நலம் சீர் படும் என்பதை பற்றியெல்லாம் யோசிடது உண்கின்றனர். காலை அவசர அவசரமாக வேலைக்கு சென்று மதியம் எதையாவது சாப்பிட்ட பின், மறுபடியும் வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு உறங்கும் வழக்கத்தைக் மாற்றி கொண்டிருக்கிறார்கள்.மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் கடையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Pirandai Kadayal
Calories: 252kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பிடி பிரண்டை
  • 1 பிடி துவரம் பருப்பு
  • 1/2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 காய்ந்த மிளகாய்
  • 3 பூண்டு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • வெந்தயம்
  • எண்ணெய் வதக்க
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • கறிவேப்பிலை சிறிது
  • எண்ணெய் தாளிக்க

செய்முறை

  • பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றவும்,
  • வெங்காயம்,பூண்டு, துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய், வெந்தயம், பிரண்டை துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். வதங்கியதும், அதனுடன் தக்காளி, புளி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, நன்கு வேக வைக்கவும்.
  • வெந்ததும்,காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி சேர்த்து நன்கு அரைக்கவும். பின், துவரம் பருப்பு மற்றும் பிரண்டை சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு கடாயில், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடைசலில் சேர்த்து பரிமாறவும்.

செய்முறை குறிப்புகள்

இந்த கடைசல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்,
 

Nutrition

Serving: 100g | Calories: 252kcal | Carbohydrates: 13g | Sodium: 353mg | Calcium: 12mg