உங்கள் வருமானத்தையும் வீட்டிற்கு பண வரவையும் அதிகரிக்க செய்யும் மணி பிளான்ட் செடியை வீட்டின் எந்த பக்கம் வைப்பது?
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள் அதிலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய செடிகளையும் வீட்டிற்கு காற்றோட்டத்தை கொடுக்கக்கூடிய மரம் செடிகளை வளர்ப்பதில் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நான் வீடுகளில் மரம் செடி கொடிகளை வளர
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள் அதிலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய செடிகளையும் வீட்டிற்கு காற்றோட்டத்தை கொடுக்கக்கூடிய மரம் செடிகளை வளர்ப்பதில் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நான் வீடுகளில் மரம் செடி கொடிகளை வளர்ப்பது இயற்கைக்கும் நல்லது நமக்கும் நல்லது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் துளசி மற்றும் மணி பிளான்ட் போன்றவைகளை வளர்ப்பதால் வீடு எப்பொழுதும் மங்களகரமாக இருக்கும். ஆனால் அந்தச் செடிகளை எந்த திசையில் நோக்கி வளர்க்க வேண்டும் என்பது சில விதிமுறைகளை பின்பற்றினால் நம் வீட்டில் வருமானம் அதிகரிக்கும். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை அளித்த நேர்மறை ஆற்றலை கொடுக்கும் செடிகள் ஏராளமாக இருந்தாலும் அதில் மணி பிளான்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டை அழகு படுத்தவும் நேர்மறை ஆற்றலை கொடுக்கவும் மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்க்கலாம். இந்த மணி பிளான்ட் செடிக்கு அதிகமான கவனிப்பு எதுவும் தேவையில்லை ஏதாவது ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைத்தால் போதும் நன்றாக வளரும் வீட்டிற்கு இயற்கை காற்றையும் கொடுக்கும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீடுகளில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் செழிப்பை கொண்டு வரவும் பொருளாதார நிலைமையை மாற்றவும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் இந்த மணி பிளாண்ட் செடியை சரியான திசையில் வைக்க வேண்டும். தவறான திசையில் இந்த செடியை வைத்தால் அதன் மூலம் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் வரும். வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை எந்த திசையில் வைத்தால் நமக்கு அதற்கான பலன் முழுமையாக கிடைக்கும் என்று ஒரு சில ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள் அதை இப்பொழுது பார்க்கலாம்.
வடக்கு திசை
மணி பிளான்ட் செடியை வடதிசையை நோக்கி வைத்தால் தொழில் சிக்கல்கள் மற்றும் பொருளாதார பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் எனவே வலது செயல் இந்த மணி பிளான்ட் செடியை ஒருபோதும் நட்டு வைக்க கூடாது. தவறான திசையில் இந்த மணி பிளான்ட் செடியை வைப்பது உறவினர்களிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும் மேலும் எதிர்மறை ஆற்றலையும் கொடுக்கும்.
வடகிழக்கு திசை
ஜோதிடத்தின்படி வடகிழக்கு திசை என்பது வியாழனை குறிக்கும் அதனால் இந்த மணி பிளான்ட் செடிகை வடக்கு கிழக்கு திசையில் வைப்பதால் அது வியாழனுக்கு எதிரியாக கருதப்படுகிறது. இந்த திசையில் மணி பிளான்ட் செடியை வைப்பது எதிர்மறை சக்தியை அதிகமாக வீட்டிற்கு கொடுக்கும். மேலும் கிழக்கு மற்றும் மேற்கு திசையிலும் இந்த மணி பிளான்ட் செடியை வைக்கக் கூடாது மீறி வைத்தால் யார் அந்த செடியை அந்த திசை நோக்கி வைக்கிறார்களோ அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படும். பொதுவாக இந்த செடியை வீட்டில் வைக்கும் மக்கள் எங்கு வைத்தால் அழகாக இருக்குமோ அங்கு தான் வைப்பார்கள் அதனால் வீட்டில் வருமானத்திற்கு பதிலாக நஷ்டத்தையே அவர்கள் சந்திப்பார்கள்.
தென்கிழக்கு திசை
விநாயகர் பெருமான் வசிக்கும் திசையான தென்கிழக்கு திசையில் நாம் மணி பிளான்ட் செடியை வைப்பதால் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நமக்கு கொடுக்கும். எனவே எப்பொழுதும் நாம் இந்த மணி பிளான்ட் செடியை தென்கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி மணி பிளான்ட் செடி புதன் கிரகம் மற்றும் குபேரருடன் தொடர்புடையது எனவே இதனை நாம் வீட்டில் வைப்பதால் நம் வீட்டிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் கடன் இல்லாத சூழ்நிலையும் அமையும். எனவே இந்த மணி பிளான்ட் செடியை சரியான விசையான தென்றலுக்கு திசை நோக்கி வைத்தால் மிகவும் நல்லது.
இதனையும் படியுங்கள் : உங்கள் வருமானம் அதிகரிக்க! வீட்டில் பண வரவு அதிகரிக்க! வெறும் ஒரு ரூபாய் போதும்!