பொடி கத்தரிக்காய் வறுவல் ஒருமுறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கத்திரிக்காய் வறுவல் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா எண்ணெய் கத்திரிக்காய் புளி குழம்பு வச்சு கொடுத்தா எல்லாரும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. கூடவே அதுக்கு ஒரு ஆம்லெட் இல்லனா அப்பளம் வறுத்து கொடுத்தா போதும் அதைவிட ஒரு அருமையான

By ·

கத்திரிக்காய் வறுவல் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா எண்ணெய் கத்திரிக்காய் புளி குழம்பு வச்சு கொடுத்தா எல்லாரும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. கூடவே அதுக்கு ஒரு ஆம்லெட் இல்லனா அப்பளம் வறுத்து கொடுத்தா போதும் அதைவிட ஒரு அருமையான சாப்பாடு வேற எதுவுமே இருக்க முடியாது. அந்த மாதிரி கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் சட்னி கத்திரிக்காய் வறுவல் எண்ணெய் கத்திரிக்காய் ரெசிபி கத்திரிக்காய் புளி கூட்டு அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம். ஆனா ஒரு சில குழந்தைகளுக்கு சுத்தமா கத்தரிக்காய் பிடிக்காது. பெரியவங்களுக்கும் கூட ஒரு சிலருக்கு கத்தரிக்காய் சுத்தமா பிடிக்காது ஆனா அப்படியே கத்திரிக்காய் சுத்தமா பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு தடவை மசாலாவை வறுத்து அரைச்சு சூப்பரான ஒரு கத்திரிக்காய் வறுவல் செஞ்சி கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க.

அதுக்கப்புறம் கத்திரிக்காய் வறுவல் செஞ்சி கொடுங்க அப்படின்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டான கத்திரிக்காய் வறுவல் செய்யணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த கத்திரிக்காய் வறுவல தயிர் சாதம் ரசம் சாதம், சாம்பார் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இந்த கத்திரிக்காய் வறுவல் செய்வதற்கு நம்ம ஒரு பொடி அரைக்கணும் அந்த பொடி அரைக்கிறதுக்கு காய்ந்த மிளகாய் உளுந்து பருப்பு, கடலைப்பருப்பு வேர்க்கடலை இதெல்லாம் சேர்த்து நம்ம அரைக்கிறதால வாசனை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த கத்திரிக்காய் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான பொடி கத்திரிக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை கத்தரிக்காய் வாங்கினால் இந்த கத்தரிக்காய் ரோஸ்ட் செய்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full