தினமும் நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக நாம் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், பட்டாணி, காளி ஃபிளவர் என்று ஒரு சில காய்கறிகளையே மீண்டும் மீண்டும் செய்வோம். கத்திரிக்காய் போன்ற காய்களை ஒரு சிலர் எடுத்துக் கொள்ள தயங்குவார்கள். கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு, அலர்ஜி போன்றவை வரும் என்ற மூடநம்பிக்கையால் அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் கத்திரிக்காய் ஆனது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் அதை அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சில காய்கறிகளை நாம் எவ்வளவு சுவையாக சமைத்தாலும், நமது வீட்டில் இருக்கும் குழந்தைகள் சிலர் அவற்றை தொட கூட மாட்டார்கள். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். ஆனால், கத்தரிக்காயை வட்டமாக நறுக்கி, அதில் சில மசாலா பொருட்களை சேர்த்து, எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால், சில நிமிடத்திலேயே தட்டு காலியாகிவிடும். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட இந்த கத்தரிக்காய் ரோஸ்ட்டை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் கத்தரிக்காய் இருந்தால் கத்தரிக்காய் ரோஸ்ட்டை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. ஒரு வாய் சாதம் எக்ஸ்ட்ராவாக போகும்.
கத்தரிக்காய் ரோஸ்ட் | Eggplant Toast Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 பெரிய கத்தரிக்காய்
- 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
- 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பெரிய கத்தரிக்காயை தண்ணீரில் அலசி விட்டு மெல்லிய வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், ஆம்சூர் பவுடர், சாட் மசாலா, உப்பு, சோள மாவு, அரிசி மாவு, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு மசாலாவை கலந்து கொள்ளவும். அதனுடன் கத்தரிக்காய் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
- ஒரு தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா தடவிய கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் ரோஸ்ட் தயார். இந்த கத்தரிக்காய் ரோஸ்ட் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் போன்ற அனைத்து வகை சாதங்களுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அருமையான ருசியில் கத்தரிக்காய் ரசவாங்கி குழம்பு எளிமையா இப்படி செய்து பாருங்க!