குழந்தைகள் மதிய உணவிற்கு சிம்பிளான அவல் தயிர் சாதம் இப்படி ஒரு முறை செய்து கொடுத்து விடுங்கள்!!
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் தயிர் சாதம். எப்படி செய்வது
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் தயிர் சாதம். எப்படி செய்வது என்று பார்ப்போமா? தயிர் சாதம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான். தயிர் சாதம் தென் இந்தியாவின் பாரம்பரியமான உணவும் கூட.
அதனால் தான் தென் இந்தியாவில் இருக்கும் கோயில்களில் தயிர் சாதத்தை பிரசாதமாக வழங்குவதை நம்மால் காண முடியும். தயிர் சாதத்தை பொதுவாக மூன்று முறையில் செய்யலாம். வெறுமனே சாதத்தில் தயிரை ஊற்றி கலந்து விடுவது, தயிர் சாதத்தில் தாளித்து ஊற்றி தயிர் சாதத்தில் பழங்களை சேர்த்து செய்வது மற்றொன்று சாதத்தில் செய்யாமல் அவல் வைத்து செய்வது. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செய்யப்படும் தயிர் சாதம்.
இந்த தயிர் சாதத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய ஒரே சாப்பாடு வகை இது தான். தயிர் சாதத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இந்த ரெசிபி பிடிக்கும். நாம் எப்போதும் போல் செய்யும் சாதாரண தயிர் சாதத்தை விட இன்று நாம் கொடுக்கப்போகும் தயிர்சாதம் ரெசிபி மிகவும் வித்தியாசமாக இருக்கும். இப்போது சுவையான அவல் தயிர் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.