- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் தயிர் சாதம். எப்படி செய்வது என்று பார்ப்போமா? தயிர் சாதம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான். தயிர் சாதம் தென் இந்தியாவின் பாரம்பரியமான உணவும் கூட.
அதனால் தான் தென் இந்தியாவில் இருக்கும் கோயில்களில் தயிர் சாதத்தை பிரசாதமாக வழங்குவதை நம்மால் காண முடியும். தயிர் சாதத்தை பொதுவாக மூன்று முறையில் செய்யலாம். வெறுமனே சாதத்தில் தயிரை ஊற்றி கலந்து விடுவது, தயிர் சாதத்தில் தாளித்து ஊற்றி தயிர் சாதத்தில் பழங்களை சேர்த்து செய்வது மற்றொன்று சாதத்தில் செய்யாமல் அவல் வைத்து செய்வது. இதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செய்யப்படும் தயிர் சாதம்.
இந்த தயிர் சாதத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய ஒரே சாப்பாடு வகை இது தான். தயிர் சாதத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இந்த ரெசிபி பிடிக்கும். நாம் எப்போதும் போல் செய்யும் சாதாரண தயிர் சாதத்தை விட இன்று நாம் கொடுக்கப்போகும் தயிர்சாதம் ரெசிபி மிகவும் வித்தியாசமாக இருக்கும். இப்போது சுவையான அவல் தயிர் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Ingredients
Method
முதலில் அவலை 15 நிமிடங்கள் ஊற வைத்து நன்கு தண்ணீர் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
பின் அவல் உடன் தயிர், மோர் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் பெருங்காயத்தூள், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அவலில் சேர்த்து கலந்து விடவும்.
பின் துருவிய மாங்காய், வெள்ளரிக்காய், மாதுளம் பழம் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான அவல் தயிர் சாதம் தயார்.






