Advertisement
காலை உணவு

மதிய உணவுக்கு ருசியான அவல் ப்ரைடு ரைஸ் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!

Advertisement

காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு பிரைட் ரைஸ் செய்யுங்கள். இந்த அவல் பிரைட் ரைஸ் வழக்கமாக செய்யும் பிரைட் ரைஸை போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த பிரைட் ரைஸ் வீட்டில் காலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர்.

பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா.துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது.

Advertisement

பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த அவல் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.

அவல் பிரைட் ரைஸ் | Poha Fried Rice Recipe In Tamil

Print Recipe
துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன்
Advertisement
மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த அவல் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது
Advertisement
மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Poha Fried Rice
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 272

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் அவல்
  • 2 கப் கேரட்
  • 50 கி பீன்ஸ்
  • முட்டைகோஸ் சிறிதளவு
  • 1 கப் குடைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் வெங்காயத்தாள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் அவலை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய் வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் பாதி வெந்ததும் மிளகுத்தூள், சோயா சாஸ், மிளகாய்த்தூள், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்து கலந்து‌ இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் ஊற வைத்துள்ள அவல் சேர்த்து நன்கு கலந்து இறுதியில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான அவல் பிரைட் ரைஸ் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 272kcal | Carbohydrates: 3.6g | Protein: 8.5g | Fat: 5.5g | Sodium: 40mg | Potassium: 4.6mg | Fiber: 4.2g | Vitamin A: 7.8IU | Vitamin C: 13.6mg | Calcium: 63mg | Iron: 21mg

இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு சூப்பரான அவல் பிரட்டல் எப்படி செய்வது என்று தெரியுமா? இதை செய்வது ரெம்ப சுலபம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

4 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

12 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

22 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago