காலை உணவுக்கு சூப்பரான அவல் பிரட்டல் எப்படி செய்வது என்று தெரியுமா? இதை செய்வது ரெம்ப சுலபம்!

- Advertisement -

அவல் வச்சு நம்ம நிறைய ஈவினிங் ஸ்நாக்ஸ்,காலை உணவு அப்படின்னு விதவிதமா அவல் கட்லெட் அவல் வடை, அவல் உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஒரு சிலருக்கு அவல் காரமா சாப்பிட்டா புடிக்கும் ஒரு சிலருக்கு அவல் இனிப்பா சாப்பிட்டா பிடிக்கும். நம்ம இத காரமா சாப்பிட்டாலும் இனிப்பா சாப்பிட்டாலும் இதுல நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க இதை காலை உணவா எடுத்துக்கலாம் ரொம்பவே உடம்புக்கு நல்லது சீக்கிரத்துல நீங்க உடல் எடையையும் குறைச்சிடுவீங்க. மாலை நேரத்துல குழந்தைங்க ஏதாவது ஸ்டாக்ஸ் கேட்டாலும் அவங்களுக்கு என்ன இல்ல பொரிச்சதை கொடுக்காமல் இந்த மாதிரி ஆரோக்கியமான அவல் கொடுக்கலாம். அந்த வகையில சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய அவல் வரட்டல் எப்படி செய்றது இருந்தா இன்னைக்கு நம்ம பாக்க போறோம்.

- Advertisement -

ரொம்பவே சட்டென்று செய்யக்கூடிய இந்த அவல் வரட்டல் நம்ம காலை உணவாகும் சாப்பிடலாம் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகும் சாப்பிடலாம். டேஸ்ட் செம்மையா இருக்கும். ஒரு தடவை இதை நீங்க உங்க வீட்ல செஞ்சு கொடுத்தீங்க அப்படின்னா குழந்தைங்க அடிக்கடி செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு இது ஒரு சுவையான டிஸ்னே சொல்லலாம். இப்ப வாங்க இந்த சத்தான ஆரோக்கியமான அவல் வரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

அவல் பிரட்டல் | Aval Pirattal Recipe In Tamil

உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க இதை காலை உணவா எடுத்துக்கலாம் ரொம்பவே உடம்புக்குநல்லது சீக்கிரத்துல நீங்க உடல் எடையையும் குறைச்சிடுவீங்க. மாலை நேரத்துல குழந்தைங்கஏதாவது ஸ்டாக்ஸ் கேட்டாலும் அவங்களுக்கு என்ன இல்ல பொரிச்சதை கொடுக்காமல் இந்த மாதிரிஆரோக்கியமான அவல் கொடுக்கலாம். அந்த வகையில சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும்ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய அவல் வரட்டல் எப்படி செய்றது இருந்தா இன்னைக்கு நம்மபாக்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Aval Varattal
Yield: 4
Calories: 213kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அவல்
  • 1/2 கப் துருவிய வெல்லம்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 6 முந்திரி
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  •  
    ஒரு கடாயில் கருப்பு எள் சேர்த்து பொரியும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் நெய் சேர்த்து முதலில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயுடன் துருவிய வெள்ளத்தை சேர்த்து உடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் இரண்டும் சேர்ந்து கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது பொட்டுக்கடலையை சேர்த்துக்கொள்ளவும்.
  • அவலை பத்து நிமிடங்கள் ஊறவைத்து இதனுடன் சேர்த்து கிளறவும்.
  • பிறகு பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, வறுத்த எள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறங்கினால் சுவையான அவல் பிரட்டல் ஆரோக்கியமான முறையில் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 213kcal | Carbohydrates: 21g | Cholesterol: 1mg | Sodium: 121mg | Potassium: 218mg

இதையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற ருசியான லெமன் அவல் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!