காலை உணவுக்கு ஏற்ற ருசியான லெமன் அவல் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

- Advertisement -

அவல் அப்படின்னு சொன்னாலே நம்ம எப்போது செய்வது அதில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் நம்ம அவலில் விதவிதமான உணவுகள் செய்யலாம் அடுப்பில்லாமல் சமையல் செய்வது அப்படிங்கற ஒரு புது விஷயம் இப்போ ரொம்பவே அதிகமா டிரெண்டாயிட்டு இருக்க. அதுல சாதத்துக்கு அரிசிக்கு பதிலா இந்த அவலை தான் பயன்படுத்தி சாதமா சாப்டுட்டு இருக்காங்க. அப்படி இந்த சுவையான அவலை வைத்து விதவிதமான உணவுகள் செய்திட்டு இருக்கும்போது நம்ம எல்லாருக்கும் புடிச்ச மாதிரி லெமன் சாதம் எப்படி லெமன் அவலா பண்றது அப்படின்னு பார்க்க இருக்கும்.

-விளம்பரம்-

இந்த சுவையான லெமன் அவல் ரொம்பவே டேஸ்டா இருக்கும் அப்படியே லெமன் சாத மாதிரியே இருக்கும். எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது ஆனால் நாங்க அவலில் பண்ணி இருக்கீங்க அப்படின்னு வெளியில் சொன்னால் தான் அது அவங்களுக்கு தெரியும். ரொம்பவே ஈஸியா பத்தே நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த லெமன் அவல் எப்படி சுவையாகவும் டேஸ்டாவும் செய்யறது எல்லாருக்கும் எப்படி புடிச்ச மாதிரி கொடுக்கிறது என்று தெரிந்துகொள்ள இருக்கோம். இந்த லெமன் அவலை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இதை நீங்க முழு நேரத்துக்கு காலையில டிபன் கூட எடுத்துக்கலாம். நினைச்சீங்கன்னா கூட அந்த மாதிரி எடுத்துக்கலாம் அவல் எல்லாரும் தேங்காய் போட்டு அவல் சாப்பிடுவோம். இல்லைனா உப்புமா செய்திருப்போம் ஆனால் அவலில் அவல் சக்கரை பொங்கல், அவல் புளி சாதம், அவல் லெமன் சாதம் , அவல் தேங்காய் சாதம், அவல் பாயாசம் அப்படின்னு விதவிதமான உணவுகள் இந்த அவல் வச்சு பண்ணலாம் .

- Advertisement -

இந்த சுவையான அவல் உணவு சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். கெட்டும் போகாது அவளை ஜஸ்ட் ஊற வச்சிட்டு நம்ம அழகா சாப்பாடு செஞ்சு கொடுத்திடலாம். சாப்பாட்டு மேல அதிக விருப்பமுள்ளவர்களுக்கு இந்த மாதிரி அவல் ஐட்டங்களை செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அது மட்டும் இல்லாம எப்பவுமே சாதம் சாப்பிட்டுட்டு இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவல்ல நீங்க உணவுகள் செய்து கொடுக்கும் போது ரொம்பவே ருசியா இருக்கும். ரொம்பவே புடிச்சும் சாப்பிடு வாங்க. இந்த சுவையான லெமன் அவல் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
4 from 1 vote

லெமன் அவல் | Lemon aval recipe in tamil

லெமன் அவலை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இதை நீங்க முழு நேரத்துக்கு காலையில டிபன் கூட எடுத்துக்கலாம். நினைச்சீங்கன்னா கூட அந்த மாதிரி எடுத்துக்கலாம் அவல் எல்லாரும் தேங்காய் போட்டு அவல் சாப்பிடுவோம். இல்லைனா உப்புமா செய்திருப்போம் ஆனால் அவலில் அவல் சக்கரை பொங்கல், அவல் புளி சாதம், அவல் லெமன் சாதம் , அவல் தேங்காய் சாதம், அவல் பாயாசம் அப்படின்னு விதவிதமான உணவுகள் இந்த அவல் வச்சு பண்ணலாம்
Prep Time10 minutes
Active Time5 minutes
Total Time15 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamilnadu
Keyword: Aval, aval payasam, Aval Poha, Aval Sundal, Aval vadai
Yield: 5 People
Calories: 95kcal
Cost: 50

Equipment

  • 1 பவுல்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கெட்டி அவல்
  • 1/2 எலுமிச்சை பழம்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கெட்டி அவலை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்பு எலுமிச்சை பழச்சாறை பிழிந்து எடுத்து வைத்துக்கொண்டு அதில் மஞ்சள் தூளை சிறிது சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் கறிவேப்பிலை , கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
  • மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும்.
  • எலுமிச்சை சாறு கொதித்த பிறகு அதில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் சுவையான லெமன் அவல் தயார்.

Nutrition

Calories: 95kcal | Carbohydrates: 9g | Protein: 6g | Fat: 4g