தாகத்தை தணிக்க மாதுளை மொஜிட்டோ இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் உடல் வெப்பம் அதிகரித்து, தாகம் தணிக்க எதையாவது தேடும். அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். சந்தையில் கிடைக்கும் செயற்கை குளிர்பானங்களை விட, நம்
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் உடல் வெப்பம் அதிகரித்து, தாகம் தணிக்க எதையாவது தேடும். அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். சந்தையில் கிடைக்கும் செயற்கை குளிர்பானங்களை விட, நம் பாரம்பரிய முறையில் செய்யப்படும் பானங்களே உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும்.
குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பார்கள். அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு தான்!! இந்த பதிவில் கோடை காலத்தில் தாகத்தை தணிக்க கூடிய சுவையான மாதுளை மொஜிட்டோ செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்.
கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல் அனைத்து காலத்திலும் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று மாதுளை. ஆனால், நம்மில் பலர் இந்த பழத்தை அப்படியே சாப்பிட மாட்டோம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? இல்லையெனில் இந்த மாதுளை மொஜிட்டோவை ஒரு முறை செய்து பாருங்கள். இந்த மொஜிட்டோ முற்றிலும் சுவையாக இருக்கும் மற்றும் தாகத்தைத் தணிக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற பானம்.
மொஜிட்டோ சமீபத்துல ரொம்பவே பிரபலமாகிக் கொண்டு வருகிறது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் மக்கள் ஆர்வத்துடன் இந்த மொஜிட்டோ குடிக்கிறார்கள். இதை பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் இதன் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே இதை அதிக விலை கொடுத்து வெளியே குடிக்காமல் வீட்டிலேயே செய்து குடியுங்கள். இப்போது சுவையான மாதுளை மொஜிட்டோ எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : குளுகுளு சீதாப்பழ மில்க் ஷேக் இப்படி வீட்டில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!!!