பழங்கள் விஷயத்தில் அது ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் இதை பலரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. இருப்பினும் பழத்தையும் வெறுப்பதில்லை. பழத்தை சாப்பிட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை.. ஆனால் இதை ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடுத்தாள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .
நம் தோட்டத்தில், வீட்டில் சில பழ மரங்கள் வைக்க முடியும். அவ்வகையில் சீதாபழம்,கொய்யா, எலுமிச்சை போன்றவை நம் ஊரில் விளையும் பழவகைகள். இதில் ஆரோக்கியமும் அதிகம். சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிக்காது. சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
இந்த சீத்தாப்பழத்தில் மில்க் ஷே இந்த முறையில் செய்து குடித்தால், ஒவ்வொரு துளியையும் ரசித்து ருசிக்கும் வகையில் இருக்கும். அதை அப்படியே சாப்பிடுவதை விட இப்படி மில்க் ஷேக் செய்து, பருகிகினால் இதன் சுவைக்கு அடிமையாகி போவீர்கள்.
மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு மற்றும் சீதாப்பழம் போன்ற சில பழங்கள் மட்டுமே ஒரு தனித்துவமான நறுமணத்தை அளித்து அதன் இருப்பை நினைவூட்டுகின்றன. அந்த வாசனையும் சுவையும் ஒரு மில்க் ஷேக் கிடைக்கப்பெற்றால் , அது உண்மையில் மாயாஜாலம் போல் இருக்கும் .
கஸ்டர்ட் ஆப்பிள் மில்க் ஷேக் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது ஆரோக்கியமான மற்றும் உற்சாகமளிக்கும் மில்க் ஷேக் , இது உங்கள் சுவை மொட்டுகளை மகிழ்விக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சீதாப்பழ மில்க் ஷேக் | Custard Apple Milk Shake In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் சீதாப்பழம்
- 3 கப் குளிர வைத்த பால்
- 3 மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் க்ரீம்
- சர்க்கரை சுவைக்கேற்ப
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை
- சீதாப்பழத்தை சுத்தம் செய்து. அதில் உள்ள விதை கலைநீக்கி ஒரு பத்திரத்தி போடவும்.
- பின்பு சீதாப்பழ விழுதை அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- மிக்ஸியில் சீதாப்பழத்துடன் வெனிலா ஐஸ் க்ரீமைச் சேர்த்துஅடித்துக் கொள்ளவும்.
- அதனுடன் பால், சர்க்கரை மற்றும் உப்புச் சேர்த்து அடித்து எடுத்துப் பரிமாறவும்
- எளிதில் தயாரிக்கக் கூடிய சத்தான, சுவையான சீதாப்பழ ஷேக் தயார்.