பொங்கல் அன்று செய்யக்கூடிய பொங்ககறி எனப்படும் காய்கறி கூட்டு, இம்முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!!!

எங்கள் ஊரில் பொங்கலன்று இந்த காய்கறி கூட்டு ரொம்பவே ஸ்பெஷல். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்வது கூட இந்த காய்கறி கூட்டையும் நாங்க செய்து ரொம்ப ருசிச்சி சாப்பிடுவோம். இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப எளிமையா செய்யக்கூடிய ஒரு காய்கறி கூட்டு. அதுவும் இந்த மாதங்களில் கிடைக்கக்கூடிய

By ·

எங்கள் ஊரில் பொங்கலன்று இந்த காய்கறி கூட்டு ரொம்பவே ஸ்பெஷல். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்வது கூட இந்த காய்கறி கூட்டையும் நாங்க செய்து ரொம்ப ருசிச்சி சாப்பிடுவோம். இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப எளிமையா செய்யக்கூடிய ஒரு காய்கறி கூட்டு. அதுவும் இந்த மாதங்களில் கிடைக்கக்கூடிய விவசாயம் பண்ணின காய்கறிகள் கிழங்கு வகைகளை வைத்து செய்வாங்க. இந்த கூட்டு ரொம்பவே ருசியா இருக்கிறது மட்டும் இல்லாமல் ரொம்ப ரொம்ப சுலபம். எந்த ஒரு தேவையில்லாத மசாலாவும் கிடையாது ஒரு மூனே மூணு பொருளை வைத்து இந்த காய்கறிகளுக்கு மசாலா செய்து போட்டு சாப்பிடுவது அவ்வளவு சுவையா இருக்கும்.

இந்தப் பொங்க கறி அப்படின்னு சொல்லக்கூடிய இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த காய்கறி கூட்டுல எல்லா காய்கறியும் நல்ல பொடியா நறுக்கி போட்டு கிழங்கு எல்லாத்தையும் பொடியா நறுக்கி போட்டு சூப்பரா வேகவைத்து செய்து கொடுப்பாங்க. இந்த பொங்ககறிய வெண்பொங்கலோட சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு சுவையா இருக்கும். பொங்கல் தினத்தன்று பொங்கல் சாப்பிடுவது எப்படி இருக்கும் அப்படிங்கறது அந்த இலையில பரிமாறும் போதே நமக்கு தெரிஞ்சிடும்.

அப்படியே பொங்கலுக்கு சாமி கும்பிடும் போது அந்த இலையில வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் அப்புறம் இந்த பொங்கல் கறிய வைப்பாங்க. அதுவும் சர்க்கரை பொங்கல் மேல அப்படியே நெய் ஊற்றி வைக்கும் போதும் வெண்பொங்கல் மேல ஒரு துண்டு வாழைப்பழம், தயிர் ஒரு வெல்ல கட்டி, ஒரு தேங்காய் துண்டு வச்சு அதை சாப்பிட்டு கொடுக்கும்போது அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த மாதிரி வெள்ளை இந்த பொங்க கறிய தொட்டு சாப்பிடும்போது அவ்வளவு டேஸ்டா இருக்கும். இந்த பொங்கல் கறி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை