பொங்கல் அன்று செய்யக்கூடிய பொங்ககறி எனப்படும் காய்கறி கூட்டு, இம்முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!!!

- Advertisement -

எங்கள் ஊரில் பொங்கலன்று இந்த காய்கறி கூட்டு ரொம்பவே ஸ்பெஷல். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்வது கூட இந்த காய்கறி கூட்டையும் நாங்க செய்து ரொம்ப ருசிச்சி சாப்பிடுவோம். இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப எளிமையா செய்யக்கூடிய ஒரு காய்கறி கூட்டு. அதுவும் இந்த மாதங்களில் கிடைக்கக்கூடிய விவசாயம் பண்ணின காய்கறிகள் கிழங்கு வகைகளை வைத்து செய்வாங்க. இந்த கூட்டு ரொம்பவே ருசியா இருக்கிறது மட்டும் இல்லாமல் ரொம்ப ரொம்ப சுலபம். எந்த ஒரு தேவையில்லாத மசாலாவும் கிடையாது ஒரு மூனே மூணு பொருளை வைத்து இந்த காய்கறிகளுக்கு மசாலா செய்து போட்டு சாப்பிடுவது அவ்வளவு சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

இந்தப் பொங்க கறி அப்படின்னு சொல்லக்கூடிய இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த காய்கறி கூட்டுல எல்லா காய்கறியும் நல்ல பொடியா நறுக்கி போட்டு கிழங்கு எல்லாத்தையும் பொடியா நறுக்கி போட்டு சூப்பரா வேகவைத்து செய்து கொடுப்பாங்க. இந்த பொங்ககறிய வெண்பொங்கலோட சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு சுவையா இருக்கும். பொங்கல் தினத்தன்று பொங்கல் சாப்பிடுவது எப்படி இருக்கும் அப்படிங்கறது அந்த இலையில பரிமாறும் போதே நமக்கு தெரிஞ்சிடும்.

- Advertisement -

அப்படியே பொங்கலுக்கு சாமி கும்பிடும் போது அந்த இலையில வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் அப்புறம் இந்த பொங்கல் கறிய வைப்பாங்க. அதுவும் சர்க்கரை பொங்கல் மேல அப்படியே நெய் ஊற்றி வைக்கும் போதும் வெண்பொங்கல் மேல ஒரு துண்டு வாழைப்பழம், தயிர் ஒரு வெல்ல கட்டி, ஒரு தேங்காய் துண்டு வச்சு அதை சாப்பிட்டு கொடுக்கும்போது அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த மாதிரி வெள்ளை இந்த பொங்க கறிய தொட்டு சாப்பிடும்போது அவ்வளவு டேஸ்டா இருக்கும். இந்த பொங்கல் கறி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

பொங்கல் கறி | Pongal kari in tamil

இந்தப் பொங்க கறி அப்படின்னு சொல்லக்கூடிய இந்த காய்கறி கூட்டு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இந்த காய்கறி கூட்டுல எல்லா காய்கறியும் நல்ல பொடியா நறுக்கி போட்டு கிழங்கு எல்லாத்தையும் பொடியா நறுக்கி போட்டு சூப்பரா வேகவைத்து செய்து கொடுப்பாங்க. இந்த பொங்ககறிய வெண்பொங்கலோட சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு சுவையா இருக்கும். பொங்கல் தினத்தன்று பொங்கல் சாப்பிடுவது எப்படி இருக்கும் அப்படிங்கறது அந்த இலையில பரிமாறும் போதே நமக்கு தெரிஞ்சிடும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Black Kavuni Arisi Kara Pongal, javvarisi pongal, pongal kari
Yield: 9 People
Calories: 85kcal
Cost: 50

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பரங்கிக்காய்
  • 1/2 கப் நாட்டு அவரைக்காய்
  • 1/4 கப் கருணைக்கிழங்கு
  • 1/4 கப் சேனைக்கிழங்கு
  • 1/2 கப் சர்க்கரை வள்ளி கிழங்கு
  • 2 ஸ்பூன் அரிசி
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பரங்கிக்காய் , கருணைக்கிழங்கு, நாட்டு அவரைக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, சேனைக்கிழங்கு இவ்வற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் அரிசியை நன்றாக பொரி அரிசி போல் பொரிந்து வரும் வரை வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் காய்ந்த மிளகாய் , பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள காய்றிகளை அதே கடாயில் சேர்த்து காய்கறிகள் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
  • வறுத்து ஆற வைத்துள்ள அரிசி , பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய் இவற்றை பொடியாக பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு காய்கறிகள் வெந்து தண்ணீர் சுண்டி வந்த பிறகு பொடித்து வைத்துள்ள இந்த பொடியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு இறக்கி பரிமாறினால் சுவையான பொங்க கறி தயார்.

Nutrition

Calories: 85kcal | Carbohydrates: 19g | Protein: 20g | Fat: 9g