Advertisement
சைவம்

பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு இப்படி பாரம்பரிய முறையில் மட்டும் செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்!

Advertisement

பொன்னாங்கண்ணி கீரையில் எத்தனையோ வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. அதை பற்றி சொல்ல தொடங்கினால் இந்த ஒரு பதிவு பத்தாது. அதே போல தான் இந்த அரிசி களைந்த தண்ணீரும் இதிலும் பல வகை ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அந்த காலத்து பெரியவர்கள் இந்த தண்ணீரில் ரசம், சாம்பார் போன்றவைகள் வைத்து சாப்பிட்டு வாழ்ந்தார்கள். இத்தனைக்கும் பல ஆண்டு காலம் நோய் இன்றி வாழ்ந்தார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நாமோ எதற்கெடுத்தாலும் மருத்துவமனையை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நாம் உண்ணும் உணவு தான். அதற்காக தான் நாம் வீட்டு பெரியவர்கள் கீரை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் அதிக சத்துக்கள் கொண்ட பொன்னாங்கண்ணி , அரிசி களைந்த தண்ணீரும் கொண்டு தான் சாறை நாம் செய்ய போகிறோம்.

பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு, பொன்னாங்கண்ணி என்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண் பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம் தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக் கீரையை இப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில் இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு வைத்து சாப்பிடுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

பொன்னாங்கண்ணி கீரை சாறு | Ponnanganni Keerai Saaru Recipe In Tamil

Advertisement
Print Recipe
பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு, பொன்னாங்கண்ணிஎன்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண்பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குகண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம்தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக்கீரையை இப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு
Advertisement
வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில்இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி பொன்னாங்கண்ணிகீரை சாறு குழம்பு வைத்து சாப்பிடுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Ponnanganni Keerai Saaru
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 337

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 300 மில்லி பொன்னாங்கண்ணி இலைச் சாறு
  • 1 மில்லி சோற்று வடிகஞ்சி / அரிசி களைந்த தண்ணி
  • 1 துண்டு இஞ்சி
  • 2 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 4 பல் பூண்டு
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
  • கடுகு சிறிதளவு
  • உப்பு சுவைக்கு
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், உப்பு, கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம் இவையனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின்னர் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி அதில் இந்த விழுதை நன்கு வதக்கவேண்டும்.
  • பிறகு பொன்னாங்கண்ணி சாறு, புளித்த வடிகஞ்சி இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். .
  • பிறகு இக்கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
  • சுவையான பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு தயார்.
  • பொன்னாங்கண்ணி உடலுக்கு குளிர்ச்சியையும், நல்ல கண்பார்வையையும் கொடுக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 337kcal | Carbohydrates: 12g | Protein: 167g | Saturated Fat: 1.7g | Sodium: 45mg | Potassium: 968mg | Fiber: 67g | Iron: 492mg
Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

10 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

17 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago