பொன்னாங்கண்ணி கீரையில் எத்தனையோ வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. அதை பற்றி சொல்ல தொடங்கினால் இந்த ஒரு பதிவு பத்தாது. அதே போல தான் இந்த அரிசி களைந்த தண்ணீரும் இதிலும் பல வகை ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அந்த காலத்து பெரியவர்கள் இந்த தண்ணீரில் ரசம், சாம்பார் போன்றவைகள் வைத்து சாப்பிட்டு வாழ்ந்தார்கள். இத்தனைக்கும் பல ஆண்டு காலம் நோய் இன்றி வாழ்ந்தார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நாமோ எதற்கெடுத்தாலும் மருத்துவமனையை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நாம் உண்ணும் உணவு தான். அதற்காக தான் நாம் வீட்டு பெரியவர்கள் கீரை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் அதிக சத்துக்கள் கொண்ட பொன்னாங்கண்ணி , அரிசி களைந்த தண்ணீரும் கொண்டு தான் சாறை நாம் செய்ய போகிறோம்.
பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு, பொன்னாங்கண்ணி என்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண் பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம் தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக் கீரையை இப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில் இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு வைத்து சாப்பிடுவது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொன்னாங்கண்ணி கீரை சாறு | Ponnanganni Keerai Saaru Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 300 மில்லி பொன்னாங்கண்ணி இலைச் சாறு
- 1 மில்லி சோற்று வடிகஞ்சி / அரிசி களைந்த தண்ணி
- 1 துண்டு இஞ்சி
- 2 சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி மிளகு
- 4 பல் பூண்டு
- 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
- 1/4 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
- கடுகு சிறிதளவு
- உப்பு சுவைக்கு
- 1 கொத்து கருவேப்பிலை
செய்முறை
- முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், உப்பு, கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம் இவையனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
- பின்னர் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி அதில் இந்த விழுதை நன்கு வதக்கவேண்டும்.
- பிறகு பொன்னாங்கண்ணி சாறு, புளித்த வடிகஞ்சி இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். .
- பிறகு இக்கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
- சுவையான பொன்னாங்கண்ணி கீரை சாறு குழம்பு தயார்.
- பொன்னாங்கண்ணி உடலுக்கு குளிர்ச்சியையும், நல்ல கண்பார்வையையும் கொடுக்கும்.