Advertisement
சைவம்

சுவையான பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் தயிர்சாதம், பால் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் பற்றி தான் பார்க்க போகாறோம். பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் சாப்பிடுவது இந்த உருளைக்கிழங்கை மட்டும் தான்.

இதையும் படியுங்கள் : சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் இந்த உருளைக்கிழங்கையும் வீட்டில் எப்பொழுதும் ஒரே மாதிரி சமைக்காமல் ஒருமுறை இது போன்று பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் | Poondu Potato Fry Recipe In Tamil

Print Recipe
பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் சாப்பிடுவது இந்த உருளைக்கிழங்கை மட்டும் தான். ஆனால் இந்த உருளைக்கிழங்கையும் வீட்டில் எப்பொழுதும் ஒரே மாதிரி சமைக்காமல் ஒருமுறை இது போன்று பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword POTATO, உருளைக்கிழங்கு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 236

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்த பருப்பு
  • ¼ KG உருளைக்கிழங்கு
  • 100 கிராம் பூண்டு
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் கால் கிலோ உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்து கொண்டு பின் பொடி
    Advertisement
    பொடியாக நறுக்கி கொள்ளவும் இதனுடன் தோல் உரித்த 100 கிராம் பூண்டையும் பொடிப் பொடியாக நறுக்கிகொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதல் அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கடுகு பொரிந்துவந்தவுடன் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் வெங்காயம் நன்கு வதங்கியதும்.
  • இதுனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போட்டு வதக்கி கொள்வும். பின்பு உருளைக்கிழங்கு ஒரளவு வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள் மற்றம் தேவையான அளவு உப்புப் போட்டுக் கிளறி விடுங்கள்.
  • அதன் பின்பு தீயை குறைவாக வைத்து கடாயை மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

Nutrition

Serving: 600gram | Calories: 236kcal | Carbohydrates: 41g | Protein: 21g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 5mg | Sodium: 3mg | Potassium: 382mg | Fiber: 8g | Sugar: 2.6g | Vitamin A: 7IU | Calcium: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

35 நிமிடங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 மணி நேரம் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

15 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

15 மணி நேரங்கள் ago