- Advertisement -
நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : பொரித்த உருளை கிழங்கு கிரேவி செய்வது எப்படி ?
- Advertisement -
பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு சீரக வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று இந்த உருளைக்கிழங்கு சீரக வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
உருளைக்கிழங்கு சீரக வறுவல் | Potato Seeraga Varuval Recipe in Tamil
நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு சீரக வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Yield: 5 People
Calories: 158kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 5 உருளைக்கிழங்கு வேக வைத்து நறுக்கியது
- 2 மேசை கரண்டி எண்ணெய்
- 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 3 பச்சை மிளகாய் கீரியது
- 1 tbsp மஞ்சள் தூள்
- ½ கடுகு
- 1 tbsp உளுந்தபருப்பு
- ½ tbsp சீரகம்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 tbsp சீரகப் பொடி
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிது
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி சிறிது சிறிது நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸபூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்,
- அதில் மேலே கொடுக்கபட்ட அளவில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு தாளிக்க கொள்ளுங்கள். அதன் பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், நாம் தோல் உரித்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து, நன்கு பத்து நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள் வேண்டும்.
- அதன் பின்பு இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கு வெந்து நன்கு ரோஸ் ஆகி மொறுமொறுவென்று வந்ததும்,
- சிறிது அளவு கொத்த மல்லி இலைகளை தூவி கடாயை இறக்கி வைத்து கொள்ளவும். பின் சாப்பிட பறிமாறுங்கள் அவ்வளவு தான் சுவையான உருளை கிழங்கு சீரக வறுவல் இனிதே தயாராகிவிட்டது.
Nutrition
Serving: 300gram | Calories: 158kcal | Carbohydrates: 24g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Cholesterol: 8mg | Sodium: 11.3mg | Potassium: 214mg | Fiber: 9g | Sugar: 3g | Iron: 2mg