சட்னி சாம்பார் என எதுவுமே தேவையில்லை இந்த உருளைக்கிழங்கு மசாலா இட்லி அப்படியே சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும்!

ஆவியில் வேகவைத்து நாம் சாப்பிடுகின்ற ஒரு உணவு தான் இட்லி. காலை உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிடுகின்ற இந்த இட்லி பல பேருக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் ஒரு சிலருக்கு இட்லியை அப்படியே சாப்பிடுவதை விட அதில் வெரைட்டியாக இட்லி உப்புமா சில்லி இட்லி மசாலா இட்லி என்ன செய்து சாப்பிட பிடிக்க

By ·

ஆவியில் வேகவைத்து நாம் சாப்பிடுகின்ற ஒரு உணவு தான் இட்லி. காலை உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிடுகின்ற இந்த இட்லி பல பேருக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் ஒரு சிலருக்கு இட்லியை அப்படியே சாப்பிடுவதை விட அதில் வெரைட்டியாக இட்லி உப்புமா சில்லி இட்லி மசாலா இட்லி என்ன செய்து சாப்பிட பிடிக்கும்.

ஒரு சிலர் காலையில் சுட்ட இட்லி மீதமாகிவிட்டது என்றால் இரவில் அதனை உப்புமாவாகவோ அல்லது சில்லி இட்லியாகவும் செய்து சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு அந்த இட்லி உடன் சட்னி சாம்பார் என வைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும்.பராம்பரியமான தென் தமிழகத்தின் உணவு தான் இட்லி.எப்பொழுதும் இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் என ஒரே மாதிரியாக டிபன் சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு கொஞ்சம் டிஃபரண்ட் ஆக ஏதாவது சாப்பிடணும் அப்படின்னு தோணும்.

அவங்களுக்காகவே இட்லி வச்சு செய்யக்கூடிய உருளைக்கிழங்கு மசாலா இட்லி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த டிஷ் செய்றதுக்கு ரொம்ப நேரம் எல்லாம் நமக்கு தேவைப்படாது. ரொம்ப வெயில் குறுகிய நேரத்துல சுவையான மசாலா இட்லி நம்ம செஞ்சு முடிச்சிடலாம். ஒரு நேரம் இட்லி செஞ்சா இன்னொரு நேரம் அந்த இட்லியை வச்சு மசாலா இட்லி புதுசா ஏதாவது முயற்சி செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம். உருளைக்கிழங்கு வச்சு நம்ம செய்ய போற இந்த மசாலா இட்லி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: காரசாரமா குண்டூர் கார சட்னி இந்த பக்குவத்தில் செய்து செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full