- Prep
- 10 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
ஆவியில் வேகவைத்து நாம் சாப்பிடுகின்ற ஒரு உணவு தான் இட்லி. காலை உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிடுகின்ற இந்த இட்லி பல பேருக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் ஒரு சிலருக்கு இட்லியை அப்படியே சாப்பிடுவதை விட அதில் வெரைட்டியாக இட்லி உப்புமா சில்லி இட்லி மசாலா இட்லி என்ன செய்து சாப்பிட பிடிக்கும்.
ஒரு சிலர் காலையில் சுட்ட இட்லி மீதமாகிவிட்டது என்றால் இரவில் அதனை உப்புமாவாகவோ அல்லது சில்லி இட்லியாகவும் செய்து சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு அந்த இட்லி உடன் சட்னி சாம்பார் என வைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும்.பராம்பரியமான தென் தமிழகத்தின் உணவு தான் இட்லி.எப்பொழுதும் இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் என ஒரே மாதிரியாக டிபன் சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு கொஞ்சம் டிஃபரண்ட் ஆக ஏதாவது சாப்பிடணும் அப்படின்னு தோணும்.
அவங்களுக்காகவே இட்லி வச்சு செய்யக்கூடிய உருளைக்கிழங்கு மசாலா இட்லி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த டிஷ் செய்றதுக்கு ரொம்ப நேரம் எல்லாம் நமக்கு தேவைப்படாது. ரொம்ப வெயில் குறுகிய நேரத்துல சுவையான மசாலா இட்லி நம்ம செஞ்சு முடிச்சிடலாம். ஒரு நேரம் இட்லி செஞ்சா இன்னொரு நேரம் அந்த இட்லியை வச்சு மசாலா இட்லி புதுசா ஏதாவது முயற்சி செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம். உருளைக்கிழங்கு வச்சு நம்ம செய்ய போற இந்த மசாலா இட்லி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: காரசாரமா குண்டூர் கார சட்னி இந்த பக்குவத்தில் செய்து செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் பட்டாணியை நன்கு ஊற வைத்து உப்புசேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கையும் வேகவைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம், கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கொள்ளவும். தாளித்து முடித்தவுடன் அதில் பட்டாணியையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
அதனுடன் உப்பு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக பச்சை வாசனை அனைத்தும் போய் கெட்டியானவுடன் இறக்கி விடவும்.
இப்பொழுது நாம் எப்போதுமே இப்படி இட்லி ஊற்றுவோமோ அதே மாதிரி இட்லி தட்டில் அரை குழிக்கு மட்டும் மாவு ஊற்றி அதன் மேல் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மறுபடியும் அதன் மேல் ஒரு சிறிதளவு மாவை ஊற்ற வேண்டும்.
இட்லி வெந்தவுடன் எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு மசாலா இட்லி தயார்.






