Advertisement
சைவம்

மொறு மொறுவென உருளைக்கிழங்கு மெதுவடை செய்வதுை எப்படி ?

Advertisement

மெது வடை அல்லது உளுந்து வடை என்பது தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுவதற்கு ஓட்டையுடன் மொறுகளான வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ் பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவுகளோடு சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறது. அத்தகைய உளுந்து வடையுடன் உருளைக்கிழங்கையும் சேர்த்து பொரித்தால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?

Advertisement

இந்த வடையுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் ஸ்நாக்ஸாக செய்து தரலாம். சரி இதெல்லாம் இருக்கட்டும் இந்த வடையை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க. இந்த வடையை எப்படி செய்வதென்று செய்முறை விளக்கங்களை கீழே கொடுத்துளோம் நீங்களும் இதை படித்து பார்த்து செய்து பாருங்கள்.

உருளைக்கிழங்கு மெது வடை | Potato Methu Vadai Recipe in Tamil

Advertisement
Print Recipe
மெது வடை அல்லது உளுந்து வடை என்பது தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுவதற்கு ஓட்டையுடன் மொறுகளாக வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ் பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவுகளோடு சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறது. அத்தகைய உளுந்து வடையுடன் உருளைக்கிழங்கையும் சேர்த்து பொரித்தால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும். இந்த வடையுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும்
Advertisement
ஸ்நாக்ஸாக செய்து தரலாம். சரி இதெல்லாம் இருக்கட்டும் இந்த வடையை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க.
Course உருளை கிழங்கு மெது வடை
Cuisine Indian, TAMIL
Keyword crispy urulai kizhangu vadai, உருளைக்கிழங்கு மெது வடை
Prep Time 15 minutes
Cook Time 5 minutes
Total Time 20 minutes
Servings 3 people
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • பவுள்

Ingredients

  • 100 கிராம் உளுந்து
  • 2 உருளை கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை தேவையான அளவு
  • இஞ்சி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணைய் பொரிப்பதற்கு தேவையான அளவு

Instructions

  • முதலில் உளுந்தினை 2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
  • அடுத்து மிக்சியில் ஊற வைத்த உளுந்தை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அரைத்த உளுந்து மாவோடு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும் பிசைந்து வாய்த்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு மெது வடை தயார்.

Nutrition

Serving: 50கிராம் | Calories: 60kcal | Carbohydrates: 28g | Protein: 7.9g | Fat: 8.4g | Saturated Fat: 1.6g | Cholesterol: 12.8mg | Sodium: 27mg | Potassium: 78mg | Fiber: 2.8g | Sugar: 5.7g
Advertisement
swetha

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

12 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

22 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago