மெது வடை அல்லது உளுந்து வடை என்பது தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுவதற்கு ஓட்டையுடன் மொறுகளான வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ் பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவுகளோடு சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறது. அத்தகைய உளுந்து வடையுடன் உருளைக்கிழங்கையும் சேர்த்து பொரித்தால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?
இந்த வடையுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும் ஸ்நாக்ஸாக செய்து தரலாம். சரி இதெல்லாம் இருக்கட்டும் இந்த வடையை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க. இந்த வடையை எப்படி செய்வதென்று செய்முறை விளக்கங்களை கீழே கொடுத்துளோம் நீங்களும் இதை படித்து பார்த்து செய்து பாருங்கள்.
உருளைக்கிழங்கு மெது வடை | Potato Methu Vadai Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- பவுள்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் உளுந்து
- 2 உருளை கிழங்கு
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 பச்சை மிளகாய்
- கருவேப்பிலை தேவையான அளவு
- கொத்தமல்லி தழை தேவையான அளவு
- இஞ்சி தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணைய் பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- முதலில் உளுந்தினை 2 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
- அடுத்து மிக்சியில் ஊற வைத்த உளுந்தை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து அரைத்த உளுந்து மாவோடு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும் பிசைந்து வாய்த்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு மெது வடை தயார்.