Home அசைவம் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்த அளவிற்கு மட்டன் அதற்கென ஒரு தனி சுவையை தரும்.

-விளம்பரம்-

மட்டன் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுக்கால், அசைவப் பிரியர்களின் ஃபேவரிட் உணவு. இந்த ஆட்டுக்காலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதை பெரும்பாலும் உடல்நலம் சரியில்லாத போது, உடலுக்கு தெம்பு கிடைக்க அதிகம் குடிக்க சொல்வார்கள். கடையில் பெரும்பாலும் ஆட்டுக்கால் சூப் சாப்பிடுகிறவர்களே நம்மில் அதிகம்.

வீட்டிலும் ஆட்டுக்கால் குழம்பு சுவையாகவும் சிம்பிளாகவும் செய்ய முடியும். அந்த வகையில் இன்று நாம் வீட்டில் ஆட்டுக்கால் வைத்து ருசியான கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக இட்லி மற்றும் இடியாப்பத்திற்கு மிகவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கால் பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் ஆட்டுக்கால் குழம்பு எப்படி மிகவும் சுவையாக வைக்கலாம் என்று பார்ப்போம். இந்த ஆட்டுக்கால் குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்து முறையும் உங்களை இது போல செய்துதர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Print
No ratings yet

கிராமத்து ஆட்டுக்கால் குழம்பு | Aattukal Curry Recipe In Tamil

அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்த அளவிற்கு மட்டன் அதற்கென ஒரு தனி சுவையை தரும். மட்டன் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுக்கால், அசைவப் பிரியர்களின் ஃபேவரிட் உணவு. இந்த ஆட்டுக்காலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கடையில் பெரும்பாலும் ஆட்டுக்கால் சூப் சாப்பிடுகிறவர்களே நம்மில் அதிகம். வீட்டிலும் ஆட்டுக்கால் குழம்பு சுவையாகவும் சிம்பிளாகவும் செய்ய முடியும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Aattukal Curry
Yield: 4 People
Calories: 186kcal

Equipment

  • 1 வாணலி
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 ஆட்டுக்கால்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 பட்டை
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • புதினா, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின் தக்காளி, தேங்காய் சேர்த்து தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி விழுது, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பின் மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரக தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இவை வதங்கியதும் தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • இவை நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் வேக வைத்து ஆட்டுக்கால் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் கொத்தமல்லி, புதினா தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கால் குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 186kcal | Carbohydrates: 5.9g | Protein: 9.5g | Fat: 7.2g | Sodium: 98mg | Potassium: 151mg | Fiber: 11.8g | Vitamin A: 26IU | Vitamin C: 334mg | Calcium: 87mg | Iron: 9.3mg

இதனையும் படியுங்கள் : ருசியான மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த வறுவல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்..!