Home அசைவம் ருசியான மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த வறுவல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே...

ருசியான மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த வறுவல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்..!

அசைவ உணவிற்கு நிறைய உயிரினங்கள் இந்த புவியில் இருந்தாலும், ஆடுகள் பங்களிப்பு அபரிவிதமானது. ஆட்டின் எந்த உறுப்பும் வீணாகாது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் மூலம் தயாரிக்கப்படும் ரத்த வறுவல், பலருக்கும் காலை டிபன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பல இடங்களில் சைடு டிஷ் ஆகவும் பயன்படுத்தவும் ரத்த வறுவல், சுவையான, ருசியான உணவு என்பது அதை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு தெரியும். வார இறுதியில் ஒரு அற்புதமான ரெசிபியை வீட்டில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு ரத்த வறுவல் பிடிக்குமா? அப்படியானால் அந்த ரத்த வறுவல் இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். அதுவும் மதுரை ஸ்டைல் ரத்த வறுவல் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு ரத்த பொரியல் சத்தானதும் கூட. ஏனெனில் ஆட்டு ரத்தத்தில் CLA உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் இது வீக்கத்தைத் தடுக்கிறது.

-விளம்பரம்-

இது தவிர இதில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. டயட்டில் இருப்பவர்களுக்கு இது நல்லது. இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதை தயாரிப்பது ரொம்ப ரொம்ப எளிது. 2 நிமிட மேஹியை விட எளிதில் தயாரித்து விடலாம். இந்த பதிவில் மதுரை ஸ்டைல் ரத்த வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த வறுவல் | Ratha Varuval Recipe In Tamil‌

அசைவ உணவிற்கு நிறைய உயிரினங்கள் இந்த புவியில் இருந்தாலும், ஆடுகள் பங்களிப்பு அபரிவிதமானது. ஆட்டின் எந்த உறுப்பும் வீணாகாது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் மூலம் தயாரிக்கப்படும் ரத்த வறுவல், பலருக்கும் காலை டிபன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பல இடங்களில் சைடு டிஷ் ஆகவும் பயன்படுத்தவும் ரத்த வறுவல், சுவையான, ருசியான உணவு என்பது அதை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு தெரியும். வார இறுதியில் ஒரு அற்புதமான ரெசிபியை வீட்டில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு ரத்த வறுவல் பிடிக்குமா? அப்படியானால் அந்த ரத்த வறுவல் இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். அதுவும் மதுரை ஸ்டைல் ரத்த வறுவல் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு ரத்த பொரியல் சத்தானதும் கூட.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: Ratha Varuval
Yield: 4 People
Calories: 75kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 ஆட்டு ரத்தம்
  • 1/4 கி சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1 கப் தேங்காய் துருவல்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ரத்தத்தை கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் ரத்தத்தை கரைத்து ஊற்றி கலந்து விடவும். பின் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.
  • ரத்தத்தில் தண்ணீர் இல்லாமல் சுண்டி வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மதுரை ஸ்டைல் ரத்த வறுவல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 75kcal | Protein: 17g | Fat: 4g | Saturated Fat: 1g | Sodium: 188mg | Potassium: 19mg | Fiber: 7g | Vitamin C: 35mg | Calcium: 18mg | Iron: 212mg

இதனையும் படியுங்கள் : ஆட்டுக்கறி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க! திரும்ப திரும்ப சிக்கன் ரெசிபி செய்வதற்கு இப்படி செய்யுங்கள்!