Advertisement
சைவம்

உருளைக்கிழங்கு தக்காளி மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற கூட்டு!

Advertisement

நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொறியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி

இதையும் படியுங்கள் : காரசாரமான உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு தக்காளி மசியல் கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று இந்த உருளைக்கிழங்கு தக்காளி மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

உருளைக்கிழங்கு தக்காளி மசியல் | Potato Tomato Masiyal Recipe in Tamil

Print Recipe
கூட்டு, பொறியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு தக்காளி மசியல் கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword POTATO, உருளைக்கிழங்கு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 410

Equipment

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 4 உருளைக்கிழக்கு
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 தக்காளி அரைத்தது
  • 2 tbsp எண்ணெய்
  • 1/2 tsp சீரகம்
  • 1 சிட்டிகை வெந்தயம்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் இடித்தது
  • 1 tbsp இஞ்சு பூண்டு விழுது
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tsp சீரகத்தூள்
  • 2 tsp தனியா தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் சிறிது
  • 1/2 tbsp கரம் மசாலா
  • கொத்தமல்லி சிறிதூ

Instructions

  • முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் , சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து சிறிது வறுத்து விடுங்கள்.
  • பின் இதனுடன்
    Advertisement
    நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும். பின் இதனுடன் இடித்த பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் நாம் வைத்திருக்கும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின் மசாலா நன்கு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின் இதனுடன் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
  • அதன் பின் குக்கரை மூடி வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின் குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கரம் மசாலா மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு தக்காளி மசியல் தயார்.

Nutrition

Serving: 800gram | Calories: 410kcal | Carbohydrates: 14g | Protein: 21g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Cholesterol: 11mg | Sodium: 1.7mg | Potassium: 383mg | Fiber: 8g | Sugar: 0.3g | Calcium: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

4 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

5 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

6 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

8 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

8 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

10 மணி நேரங்கள் ago