- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நாம் சாப்பிடும் உணவுகளுடன் கூட்டுப் பொரியல் என்று ஏதாவது ஒன்றை வைத்து சாப்பிட்டால் தான். நாம் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட்டு முடிப்போம். அப்படி கூட்டு, பொறியல் மற்றும் அவியல் என நாம் செய்யும் அனைத்திலும் பெரும்பாலும் இடம் பிடிப்பதும், நிறைய நபர்களுக்கு பிடித்த காய்கறி என்று சொன்னால் அது உருளைக்கிழங்கு தான். அந்த அளவிற்கு உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி
இதையும் படியுங்கள் : காரசாரமான உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி ?
நாம் செய்யும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.ஆகையால் இன்றும் நாம் உருளைக்கிழக்கில் பயன்படுத்தி உருளைகிழங்கு தக்காளி மசியல் கூட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதனால் இன்று இந்த உருளைக்கிழங்கு தக்காளி மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
Ingredients
Method
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் , சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து சிறிது வறுத்து விடுங்கள்.
பின் இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும். பின் இதனுடன் இடித்த பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் நாம் வைத்திருக்கும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின் மசாலா நன்கு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். பின் இதனுடன் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடுங்கள்.
அதன் பின் குக்கரை மூடி வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின் குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து கரம் மசாலா மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு தக்காளி மசியல் தயார்.






