மாணவர்கள் நன்கு படிக்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்றாலும் தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களின் கனவு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான். அதற்கு தேவையான படிப்பை அவர்களுக்கு தர தான் இன்று
ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்றாலும் தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களின் கனவு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான். அதற்கு தேவையான படிப்பை அவர்களுக்கு தர தான் இன்று ஒவ்வொரு பெற்றோரும் தினம் தினம் பாடுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி செய்தாலுமே கூட எல்லா பிள்ளைகளும் நல்ல முறையில் படித்து ஆளாவதில்லை. ஒரு சில குழந்தைகள் இயற்கையிலேயே சிறப்பாக படிப்பார்கள்.
அவர்களுக்கு என்று தனிப்பட்ட அக்கறை எதுவும் காட்ட வேண்டிய தேவை இருக்காது. ஒரு சில குழந்தைகள் நன்றாக படிக்கும். ஆனால் அவர்களிடம் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இதனால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே அவர்கள் மீது சிறிது அக்கறை காட்ட வேண்டியிருக்கும். ஒரு சில குழந்தைகள் படிப்பில் மந்தமாக சோம்பலாக இருக்கும். அவர்களை படிக்க வைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் குழந்தைகள் தினமும் எந்த மந்திரத்தை உச்சரித்தால் கவனம் சிதறாமல் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
படிப்பில் சிறந்து விளங்க மாணவர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
புதன் பகவான் மந்திரம்
“இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றிபதந் தந்தருள்வாய் பன்னொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி”
இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து, கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
ஹயக்ரீவர் மந்திரம்
“உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ வாகீச்வரேஸ்வரா, ஸர்வ வேத மயா சிந்த்யா ஸர்வம் போதய போதய”
இந்த மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் மாணவர்களின் சிந்தனை சிந்தனை ஒருமுகப்படுவதோடு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கூடும்.
சரஸ்வதி மந்திரம்
“ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீம் வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா”
இந்த மந்திரத்தைச் சொல்லி வணங்குவதால் சரஸ்வதி தேவியின் அருள் என்றென்றும் துணை நிற்கும்.
கணபதி மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயேவர வரதா சர்வ ஜனம்மே வஷமானாய ஸ்வாஹா”
இந்த கணபதி மந்திரத்தை சொல்லி வணங்குவது அவர்கள் கல்வியில் சிறக்க கைகொடுக்கும்.
குழந்தைகள் நன்கு படிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று காலையிலேயே கோவிலுக்குச் சென்று புதனுக்கு பச்சைப்பயறு செய்து நைவேத்தியமாக வைத்து 21 முறை புதனை சுற்றி வரவும். இந்த நைவேத்தியத்தை உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வர புதனின் சாதகமான பலனாக உங்கள் குழந்தையின் புத்தி கூர்மை அதிகரிக்கும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். அனைத்து பாடங்களிலும் சிறப்புற திகழ முடியும். இதனை செய்வதோடு, அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று தேன் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்த தேனை தினமும் ஒரு சொட்டு குழந்தைகளுக்கு கொடுத்து வரும் போது அவர்களின் ஞாபக திறன் அதிகரிப்பதுடன் படிப்பில் இன்னும் நல்ல முன்னேற்றம் அடைய முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதனையும் படியுங்கள் : தினமும் அரை மணி நேரம் இந்த மந்திரம் சொன்னால் மட்டும் போதும் பணம் தானாகவே வீடு தேடி வரும்!