சிவனின் அருள் கிடைக்க பிரதோஷ நாளில் இப்படி வழிபடுங்கள்

சிவனுக்குரிய வழிபாடுகள், விரதங்களில் மிகவும் உன்னதமானது பிரதோஷ வழிபாடு என சிவ புராணம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பல புராணங்களும் பிரதோஷ மகிமையை போற்றி சொல்கின்றன. பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. நெடுங்காலங்களுக்கு முன் ச

By Prem Kumar · 9/7/2024

சிவனுக்குரிய வழிபாடுகள், விரதங்களில் மிகவும் உன்னதமானது பிரதோஷ வழிபாடு என சிவ புராணம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பல புராணங்களும் பிரதோஷ மகிமையை போற்றி சொல்கின்றன. பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. நெடுங்காலங்களுக்கு முன் சித்தர்கள் மட்டும் வழிபாடு செய்து வந்தனர். அதன் பின்னர் சித்தர்கள் வழியில், ஆன்மிக நெறியைப் பின்பற்றி வந்தவர்களும், அதன் பின்னர் மிகவும் பிரபலமான சில ஆன்மிக பிரியர்கள் செய்துவந்தனர். தற்போது பிரதோஷத்தின் அருமையும், பெருமையும் அறிந்ததால், அனைத்து மக்களும் பிரதோஷத்திற்காக சிவ ஆலயத்தை நோக்கி செல்கிறார்கள். பிரதோஷ காலத்தில் நாமும் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால், சிவனின் பரிபூரண அருளை நம்மால் பெற முடியும். சிவனின்‌ பரிபூரண அருளை பெற எப்படி வழிபடலாம் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

பிரதோஷம் என்றால் என்ன?

பிரதோஷத்தில் இருக்கும் ‘தோஷம்’ குற்றத்தை குறிக்கிறது. பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம் ஆகும். பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும், அது அகன்று குற்றமற்றவராக அவர்களை வாழச் செய்யும் அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு காலமாக இருக்கிறது. பிரதோஷ நேரத்தில்தான் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 ஆம் திதியன்று வருவது பிரதோஷ தினம். இந்த பிரதோஷ நாளில் சிவனின் தரிசனத்தை பெற்றால் பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ வரலாறு

பிரதோஷம் குறித்த கதை காலம் காலமாக நம் மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. அதாவது தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது வாசுகி நாகத்தினை மத்தாக போட்டு கடைந்தார்கள். உடல் முழுவதும் காயம் ஏற்பட வாசுகி, கொடிய விஷத்தினை கக்கியது. இதனால் உலகமே அழிந்து விடும் என்று சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். இந்த விஷமானது அவரது உடலுக்குள் சென்று ஏதும் செய்துவிடக் கூடாது என்று பார்வதி தேவி, சிவனின் தொண்டையை பிடிக்க அந்த விஷமானது அங்கேயே தங்கி விட்டது. ஆனால் அந்த விஷத்தினால் சிவபெருமானின் தொண்டை நீல நிறமாக மாறி விட்டது. ஆகவே தான் அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது.

அவை அனைத்துமே திரியோதசி அன்று மாலை வேளையில் நடைபெற்றது. இவை அனைத்தும் அறியாத தேவர்கள் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு தமக்காக விஷத்தை உண்ட சிவபெருமானின் நிலையை கவனிக்காமல் இருந்து விட்டோமே என வருந்தி அவரிடம் சென்று மன்னிப்புக கேட்டனர். சிவபெருமான் அவர்களை மன்னித்து, அவர்களுக்கு அதனால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாவங்களையும் விலக்கினார். அந்த ஆனந்தத்தில் அவர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே அற்புதமான களி நடனம் எனும் நடனத்தை ஆடினார். பார்வதி தேவியும் அவர் அருகில் நின்றவாறு அவர் ஆடிய நடனத்தை ஆனந்தமாக ரசித்துக் கொண்டு இருந்தார். அதனால்தான் சுக்ல மற்றும் கிருஷ்ண பட்சத்தில் திரியோதசையின் மாளை காலம் பிரதோஷ காலம் என பெயர் பெற்றது.

பிரதோஷ விரத முறை

பிரதோஷத்தன்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கித் துதித்தால் வாழ்வின் அனைத்து வளமும் பெருகுமாம். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இந்த விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு பால், தண்ணீர், இளநீர் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதன் மேல் அருகம்புல், தாமரை பூ வைத்து வழிபட வேண்டும். ஒரு விளக்கேற்றி வைத்து, சிவனின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதால் சிவ பெருமானின் அருள் முழுவதுமாக கிடைக்கும். மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்த பின் விரதத்தை முடித்து கொள்ளலாம். அதோடு கோவிலில் உள்ள நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதியை நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இருந்து பார்த்து வணங்கி பூஜை செய்தால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

பிரதோஷத்தன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்

இந்த மந்திரத்தை மனதார சொன்னால் நமக்கு ஏற்பட்டுள்ள சாபம் அனைத்தும் போய்விடும். அதுவும் இந்த மந்திரத்தை பிரதோஷத்தன்று சொன்னால் நல்லது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் நோய்கள் குணமாகும், தீய சக்திகள் எதுவும் நெருங்காது, சிவனின் அருள் கிடைக்கும், மன அமைதி அடையும். மரணத்தில் இருந்த பாதுகாக்கும். துன்பம், மனஅழுத்தம் ஆகியவற்றை நீக்கும்.

இதனையும் படியுங்கள் : மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!

Recipes AMP · Quick view
View full