காரசாரமான கேரளா ஸ்டைல் இறால் மிளகு வறுவல் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!

இறால்கள் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். இறால் மட்டும் என்று கூற இயலாது கடல் சார்ந்த உணவுகளின் மீது விருப்பமுள்ள அசைவ பிரியர்கள் பலர் இங்கு உண்டு. அப்படிப்பட்ட கடல் சார்ந்த உணவுகளில் இறாலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இறால் உணவுகளில் அதிக அளவு கனிம சத்த

By ·

இறால்கள் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். இறால் மட்டும் என்று கூற இயலாது கடல் சார்ந்த உணவுகளின் மீது விருப்பமுள்ள அசைவ பிரியர்கள் பலர் இங்கு உண்டு. அப்படிப்பட்ட கடல் சார்ந்த உணவுகளில் இறாலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இறால் உணவுகளில் அதிக அளவு கனிம சத்தும் இருக்கின்றது. இந்த கனிமச்சத்து ரத்தத்தில் ஆக்சிஜன் கலப்பதற்கு அதிக அளவு உபயோகப்படுகிறது.

இறால்கள் உடலில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலப்பதற்கு உதவுகிறது.மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். இறாலில் அயோடின், ஒமேகா கொழுப்பு அமிலம், கனிம சத்து மற்றும் விட்டமின் டி  இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள்  உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் காரணம் இறாலில் கார்போஹைட்ரேட் கிடையாது. இறாலில் அயோடின் அதிகமாக இருப்பதால் இது தைராய்டு சுரப்பை அதிகரிக்கும்.

பருவமடைந்த பெண்கள், கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு இந்த இறால் மிகவும் நல்ல பலனை கொடுக்கின்றது. இறாலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால் கொழுப்பினால் ரத்த ஓட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் வராமல் தடுக்கிறது. ஆகையால் மாரடைப்பு நெஞ்சு வலி போன்றவை தடுக்கப்படுகிறது. இறாலில் இருக்கும் ஹெப்பர் என்ற பொருள் கண் பார்வை சிதைவியிலிருந்து காக்கிறது. மேலும் கண் வலிக்க நிவாரணியாகவும் பயன்படுகின்றது. இறால் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.

இறாலில் உள்ள கனிமச்சத்துக்கள் முடி வளர்வது உடலில் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகின்றன. இத்தனை சத்துக்கள் அடங்கியுள்ள இறாலை நாம் விதவித உணவுகளாக செய்து சாப்பிடிருப்போம். இன்று நாம் இறாலை மிளகு வறுவல் செய்து சாப்பிட இருக்கிறோம். இந்த இறால் மிளகு வறூவல் மிகவும் சுவையுடையதாக சுலபமாக எப்படி வீட்டில் தயார் செய்வதூ என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · Quick view
View full