பிரான் புலாவ் இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிள் டேஸ்டா செஞ்சு பாருங்க!!

ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு மாதிரியான ரெசிப்பிஸ் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு மசாலா அதிகமா சேர்த்து செய்கிற பிரியாணி பிடிக்கும் ஒரு சிலருக்கு மசாலாவே சேர்க்காத புலாவ் ரெசிபி ரொம்ப பிடிக்கும். வெஜ் புலாவ், பச்சை பட்டாணி புலாவ் அப்படின்னு வெஜ்ல நிறைய செஞ்சு இருப்பீங்க அதே மாதிரி நா

By Prem Kumar · 13/8/2025

ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு மாதிரியான ரெசிப்பிஸ் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு மசாலா அதிகமா சேர்த்து செய்கிற பிரியாணி பிடிக்கும் ஒரு சிலருக்கு மசாலாவே சேர்க்காத புலாவ் ரெசிபி ரொம்ப பிடிக்கும். வெஜ் புலாவ், பச்சை பட்டாணி புலாவ் அப்படின்னு வெஜ்ல நிறைய செஞ்சு இருப்பீங்க அதே மாதிரி நான் வெஜ்ல ஒரு சூப்பரான பிரான் புலாவ் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல நம்ம ஒரு கப் தேங்காய் பால் சேர்க்க போறதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

இந்த டேஸ்டான புலாவ் ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இதுகூட ஏதாவது சிக்கன் கிரேவி பிரான் கிரேவி செஞ்ச தொட்டுக்கிட்டா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு காரம் அதிகம் சேர்க்காமல் செய்ற ரெசிப்பிஸ் கொடுக்கணும் அந்த வகையில இந்த மாதிரி மசாலா அதிகமா சேர்க்காத ஒரு ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க‌.

இதுல முந்திரிப்பருப்பு நெய் எல்லாமே சேர்க்கறதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா எப்பவுமே அவங்களுக்கு மட்டன் சிக்கன் அப்படின்னு சமைச்சு கொடுக்காம ஒரு தடவை இந்த பிரான் எடுத்து பிரான் புலாவ் ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான பிரான் புலாவ் ரெசிபி எப்படி செய்வது என்று வாங்க பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full