கைரேகையை வைத்து கணிக்க கூடிய சில விஷயங்கள்!
ஜோதிட ரீதியாக கைரேகை மூலமாக வாழ்க்கையின் ஒரு சில விஷயங்களை நம்மால் கணிக்க முடியும் அந்த வகையில் கைரேகை என்பது எதிர்காலத்தை பற்றி அறியக்கூடிய ஒரு வழி பொதுவாக மக்கள் அவர்களுடைய காதல் திருமணம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அதனை தெரிந்து கொள்ள கைரேகையை வைத்து தெரிந்து கொள
ஜோதிட ரீதியாக கைரேகை மூலமாக வாழ்க்கையின் ஒரு சில விஷயங்களை நம்மால் கணிக்க முடியும் அந்த வகையில் கைரேகை என்பது எதிர்காலத்தை பற்றி அறியக்கூடிய ஒரு வழி பொதுவாக மக்கள் அவர்களுடைய காதல் திருமணம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அதனை தெரிந்து கொள்ள கைரேகையை வைத்து தெரிந்து கொள்ளலாம் எதிர்காலத்தில் அவர்களுக்கு திருமணங்கள் எத்தனை இருக்கும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி எல்லாம் கைரேகை சொல்லிவிடும்
திருமண கோடுகள்
உள்ளங்கையில் சிறிய வெள்ளலின் கீழ் விழும்பில் சிறிய கிடைமட்ட கோடுகள் நிறைய இருக்கும் இந்த கோடுகள் உள்ளங்கையின் வெளிப்புறத்தில் இருந்து உள்நோக்கி வரும் இந்த கோடுகள் திருமண கோடுகள் என்று அழைக்கப்படும்.
திருமண கோடுகள் சொல்லும் பலன்கள்
உள்ளங்கையில் பல சிறிய திருமண கோடுகள் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் பல காதலர்கள் இருப்பார்கள் இந்த கோடுகள் மிகவும் இலகுவாக இருந்தால் அந்த நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்வி அடைந்து இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண கோடுகள் இருந்தால் அவை நீளமாக இருந்தால் அந்த நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது. திருமண கோடு நேராகவும் வேறு எந்த கோட்டுடனும் சேராமல் இருந்தால் அந்த நபருடைய திருமணம் மிகச் சிறப்பாகவும் நடக்கும் மேலும் அவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். திருமண கோடு வேறு கோடுகளால் வெட்டப்பட்டால் அவருடைய திருமண உறவு நீண்ட காலம் நீடிக்காது. திருமணக்கோடு சிறிது தூரம் நேராக இருந்து பின்னர் வெட்டப்பட்டால் அந்த குறிப்பிட்ட நபருக்கு விவாகரத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்